முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலும் சுமார் 44,000 டிக்கெட் முன்பதிவுகளை கொண்டுள்ளது !!
‘முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலும் சுமார் 44,000 டிக்கெட் முன்பதிவுகளை கொண்டுள்ளது !!சென்னை 24 டிசம்பர் 2024 தமிழில் ‘முஃபாஸா: தி லயன் கிங்’ படத்திற்காக அர்ஜுன் தாஸின் தனித்துவமான குரல், பார்வையாளர்களிடமிருந்து பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
அவரது குரல் முஃபாசா கதாபாத்திரத்தை மறக்க முடியாததாகவும் பார்வையாளர்களுக்கு இன்னும் நெருக்கமானதாகவும் மாற்றியுள்ளது.
ஷாருக்கான் மற்றும் மகேஷ் பாபு முறையே இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகளில் தங்கள் குரல் மூலம் பலம் சேர்த்தாலும் அர்ஜுன் தாஸின் குரல் தனித்து தெரிவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அர்ஜுன் தாஸின் ஆழமான மற்றும் கட்டளையிடும் குரல் நடிப்பு முஃபாசா கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பொருத்தமானதாகவும் அதனை வேறொரு தளத்திற்கும் கொண்டு சென்றுள்ளது.
கிறிஸ்மஸ் நெருங்கும் இந்த வேளையில், ‘முஃபாசா: தி லயன் கிங்’ பிவிஆர் ஐநாக்ஸ், சினிபாலிஸ் போன்ற அனைத்து மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலும் சுமார் 44,000 டிக்கெட் முன்பதிவுகளை கொண்டுள்ளது.
‘புஷ்பா 2’ மற்றும் ‘பேபி ஜான்’ ஆகிய படங்களின் கடுமையான போட்டி இருந்த போதிலும் நடிகர்கள் அர்ஜுன் தாஸ், ஷாருக்கான் மற்றும் மகேஷ் பாபுவின் அற்புதமான குரல் நடிப்பு படத்தின் வெற்றிக்கு அச்சாரமாக உள்ளது.
Related posts:
’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பிரத்யேகமான புதிய போஸ்டரில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முஃபாசாவாக கர்ஜிக்கிறார்!
’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தில் பணிபுரிவது ஒரு அரிய வாய்ப்பு!” நடிகர் நாசர்!
முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் தமிழ் பதிப்பில் டிமோன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் சிங்கம் புலி!
முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் டிசம்பர் 20, 2024 அன்று தமிழில் வெளியாகிறது !!
காஃபி மில்தி ஜூல்தி ஹை நா எஹ் கஹானி முஃபாசாவின் தி லயன் கிங் ஒரு புதிய வீடியோவில் முஃபாசா:வின் பயணத்திற்கு இணையான ஒன்றை ஷாருக்கான் வெளிப்படுத்துகிறார் !!
இந்தியாவில் 100 கோடி வசூலில் இணைந்த தி லயன் கிங்… சாதனை படைத்த 4-வது ஹாலிவுட் படம்!
20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும் ‘அரவிந்த் சாமி’
டிஸ்னியின் பிரமாண்ட லைவ் – ஆக்ஷன் படமான ‘தி லயன் கிங்’ படத்தின் தமிழ் வசனம் மற்றும் பாடல்கள் எழுதும் விருது வென்ற எழுத்தாளர் மதன் கார்க்கி
லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் புகழ் பெற்ற ‘சிம்பா’ கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் நடிகர் சித்தார்த்
சிங்கத்துக்கு குரல் கொடுத்து சிங்கத்தை வாழ வைத்தது அரவிந்தசாமி தான்-தி லயன் கிங்

