தமிழ் தெலுங்கு மலையாளம் மட்டுமல்லாமல் வியட்நாம் நாட்டின் மொழி திரைப்படத்திலும்  இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்து வருகிறார் !

தமிழ் தெலுங்கு மலையாளம் மட்டுமல்லாமல் வியட்நாம் நாட்டின் மொழி திரைப்படத்திலும்  இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்து வருகிறார் !

சென்னை 30 ஜூலை 2026 தமிழ் திரைப்பட உலகில்  முன்னணி இசையமைப்பாளர் சாம் சி எஸ் இளையராஜா ஏ.ஆர் ரகுமான்,  யுவன் சங்கர் ராஜா,  இவர்களுக்கு பிறகு பின்னணி இசையில் சாம்.சி.எஸ் அவர்களுக்கு தமிழ், தெலுங்கு மலையாளம், திரைப்பட உலகில் ஒரு தனி இடம் உள்ளது.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். அவர்கள்  ‘ஓர் இரவு’ என்ற  திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். அவர்களுக்கு பெரிய அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த ஆரம்பகாலத் திரைப்படம் ‘அம்புலி’ (2012)  திரைப்படம்  மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று தந்தது.

இயக்குநர் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடிகர் மாதவன் & மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘விக்ரம் வேதா’  திரைப்படத்தில் இவரது பாடல்களும் பின்னணி இசையும் தமிழ் திரைப்பட உலகில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது

தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய அளவில் புகழைத் தேடித்தந்தது.

 
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். அவர்களுக்கு ஜூலை 30ஆம் தேதி அன்று தனது பிறந்தநாளை

முன்னிட்டு நேற்று ஜூலை 29ஆம் தேதி பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுடன் கேக் வெட்டி  கொண்டாடுகிறார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். அவர்கள் பேசும் போது…

2010 ஆம் ஆண்டு என் இசை பயணத்தை தமிழ்த் திரைப்பட உலகில் தொடங்கினேன்.

இந்த 16 ஆண்டுகளில் இதுவரை 100 திரைப்படங்களை கடந்து விட்டேன்.

முன்பெல்லாம் ஃப்ரீயாக இருந்தேன்.

எப்போது திரைப்பட வாய்ப்புகள் வரும் என்று காத்திருந்தேன்.

தற்போது நிறைய லிரைப்படங்கள் வந்து நான் பிஸியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் இப்போது நடிப்பு விட இசைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்.

இசையில் ஒரு தனி யிடம் வேண்டும் என்பதற்காக முயற்சித்து வருகிறேன்..

அம்புலி திரைப்படத்தில் என்னுடைய இசை பயணத்தை தொடங்கினேன்.

தற்போது சர்தார் 2 எனது நூறாவது திரைப்படம்.

100 திரைப்படங்களின் கடந்து தற்போது நான் 10 திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்.

தமிழ்த் திரைப்பட உலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்த போதிலும் வியட்நாமீஷ் (வியட்நாம் நாட்டின் மொழி) ஒரு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ்  இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் எனக்கான ஒரு இசை திருவிழா நடைபெற இருக்கிறது.

ஆகஸ்ட் மாதத்தில் என்னுடன் பணியாற்றிய இசை கலைஞர்கள் பாடகர் பாடல் ஆசிரியர்கள் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் ஆகியோரின் ஒரு பிரம்மாண்ட விழா ஒன்று  நடைபெற உள்ளது..

விரைவில் உங்களை மீண்டும் சந்திப்பேன்.

பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் நீங்கள் இல்லாமல் நான் இல்லை.

என் வளர்ச்சியில் பத்திரிக்கையாளர்கள் மீடியாக்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர்.

எனவே உங்களுடைய அன்புக்கும் ஆசிக்கும் நன்றி.. ” என சாம் CS அவர்கள் கூறினர்.

error: Content is protected !!