இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் உடல்நலக்குறையால் காலமானார்.
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் உடல்நலக்குறையால் காலமானார்.
கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், சற்று முன் இலங்கையில் காலமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பவதாரணிக்கு தற்போது 47 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய இசையால் உலக ரசிகர்களை கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய கடின உழைப்பால் முன்னணி இசையமைப்பாளர் என்கிற அங்கீகாரத்தை பெற்றவர்.
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜவின் மகளும், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணி திரை பின்னணி பாடகி இசையமைப்பாளர் ஆவார்.
மேலும் சுமார் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர்.
இவர் பிரபுதேவா நடிப்பில் ராசய்யா திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.
தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த திரைப்படங்களில் மட்டுமே பாடி வந்தார்.
இவர் இசைஞானி இளையராஜா இசையில் பாரதி திரைப்படத்தில் பாடிய மயில்போல பொண்ணு ஒண்ணு பாடலுக்கு இவருக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.
இவர் பாடிய தேவதையா என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டான பாடல்.
மேலும் பல திரைப்படங்களில் இவர் பாடிய பல பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளது.
அதில் இவர் பாடிய பாடல்களில் குறிப்பிடும்படியாக பாடல்கள் உல்லாசம் திரைப்படத்தில் முத்தே முத்தம்மா, தனுஷ் நடித்த திரைப்படத்தில் இவர் பாடிய ஹிட்டான பாடல் ஆத்தாடி, ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசப்பட்டு காத்திருக்கா டா என்பதாகும்.
இவருடைய மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.











