தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து, இன்று  பேச்சுவார்த்தை நடைபெற்றது!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து, இன்று  பேச்சுவார்த்தை நடைபெற்றது!

சென்னை 30 ஜூன் 2026 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களின் முன்னிலையில், திரைப்பட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து, சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள 23 சங்கங்களின் தலைவர், செயலாளர் கலந்துகொண்ட கலந்துரையாடல் கூட்டம், இன்று 30.6.2026 சென்னை Accord ஹோட்டலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தயாரிப்பாளர்களின் நன்மை கருதி முக்கிய முடிவுகள் எடுக்கபட்டுள்ளது.

அதில் குறிப்பாக தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்காத வண்ணம், தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சியாக, சிறிய, மத்திமம், பெரிய பட்ஜெட் என்று மூன்று வகையாக பிரித்து அதற்குரிய சம்பளம் வழங்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து முடிவு செய்து நடைமுறைபடுத்த திட்டமிட்டுள்ளார்.

இது இந்திய திரையுலகிற்கு எடுத்துக்காட்டாய் அமையும் என்பதில் ஐயமில்லை.

மேற்படி கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. கலைப்புலி எஸ் தாணு, அவர்கள் துணைத்தலைவர் திரு.s. கமலக்கண்ணன் அவர்கள் செயலாளர்கள் திரு. S. கதிரேசன், அவர்கள் திரு. ஆர். ராதாகிருஷ்ணன், அவர்கள் பொருளாளர் n. சுபாஷ் சந்திர போஸ், அவர்கள் இணைச் செயலாளர் திருமதி சுஜாதா விஜயகுமார், அவர்கள் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் திரு.டி. சிவா, அவர்கள் பொருளாளர் திரு.தனஞ்செயன் அவர்கள் மற்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் இயக்குநர் திரு. ஆர்.வீ.உதயகுமார், அவர்கள் இயக்குநர் பேரரசு அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டார்கள்..

error: Content is protected !!