இயக்குநர் R. கண்ணன் இயக்கும் புதிய படம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். படப்பிடிப்பு ஆரம்பமானது.
சென்னை 24 மார்ச் 2021மசாலா பிக்ஸ் பட நிறுவனம் சார்பில் R. கண்ணன் தயாரித்து இயக்கும் ‘புரொடக்க்ஷன் 5′ தயாரித்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் ஆரம்பமானது.
கேரளா மக்களிடம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட” தி கிரேட் இந்தியன் கிச்சன் ” படத்தின் தமிழ்- தெலுங்கு மொழி ரீமேக் உரிமையை R. கண்ணன் வாங்கியுள்ளார்.
இதன் இரண்டு பதிப்பிலுமே ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒரு பெண் படித்து பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்கு பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்கு பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது.
கணவனும் புகுந்தவீட்டாரும் அவளை எப்படி நடத்துகிறார்கள் என்பதே இக்கதை.
இந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
மீண்டும் இவருக்கு ஒரு பெரிய பாராட்டுக்கள் குவியும் கேரக்டராக இது அமையும்.
இதன் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் ஆரம்பமாகியது.
முதல் நாள் படபிடிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார்.
காரைக்குடியிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடை பெறும்.
இவரது ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். ‘
மாஸ்கோவின் காவேரி ‘ படம் மூலம் சமந்தாவுடன் அறிமுகமான இவர் பின்பு ‘ வணக்கம் சென்னை ‘, யூ- டர்ன் ‘ மற்றும் பல படங்களில் நடித்தார்.
அதே வேளையில் ‘அந்தாள ராட்சசி’ படம் மூலம் தெலுங்கிலும் நாயகனாக அறிமுகமாகி பிரபலமானார் .

தெலுங்கில் இயக்குனராகவும் இருந்து வருகிறார்.
இந்த படம் மூலம் மீண்டும் தமிழ் – தெலுங்கு மொழிகளில் நடிக்கும் இவர் இன்று முதல் படபிடிப்பில் கலந்து கொள்கிறார்.
மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு பாலசுப்ரமணியெம்,
R.கண்ணனின் மசாலா பிக்ஸ் மற்றும் MKRP புரொடக்ஷன் சார்பாக M.K. ராம் பிரசாத் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.
R.கண்ணனின் மசாலா பிக்ஸ் மற்றும் MKRP புரொடக்ஷன் சார்பாக M.K. ராம் பிரசாத் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.
Related posts:
இயக்குநர் R.கண்ணன் இயக்கத்தில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவிச்சந்திரன் நடிக்க தமிழில் கோலாகலமாக துவங்கியிருக்கிறது “தி கிரேட் இந்தியன் கிச்சன்”.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் புதிய படம் இன்று எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் புதிய படம். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் பூஜையுடன் படபிடிப்பு ஆரம்பம்.
ஆக்ஷன் கிங் அர்ஜீன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும், க்ரைம் திரில்லர் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது !
கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்’ கே ஜே ராஜேஷ் தயாரிப்பில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் விருமாண்டி எழுதி – இயக்கும், ‘க/பெ ரணசிங்கம்.
இரண்டு ஜோடிகளுடன் சந்தானம். R.கண்ணன் இயக்கும் புதிய படம் !
ஆக்ஷன் கிங் அர்ஜீன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகிறது, புத்தம் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் !
வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் செல்வக்குமார் இயக்கும் ‘பம்பர்’ படத்தில் வெற்றி ஜோடியாக ஷிவானி நடிக்கிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!
ஆக்ஷன் கிங் அர்ஜீன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகிறது, புத்தம் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் !

