‘நூறுசாமி’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், மூர்த்தி, ஜென்சன் திவாகர், பாடினி குமார், முனிஷ்காந்த், பக்ஸ், வினோதினி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சசி.
ஒளிப்பதிவாளர் :- எஸ் பி தர்ஷன் கிர்லோஸ்.
படத்தொகுப்பாளர் :- ஹரிஷ் யுவராஜ்.
இசையமைப்பாளர் :- பாலாஜி ஸ்ரீராம்.
தயாரிப்பு நிறுவனம் :- விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்.
தயாரிப்பாளர்கள் :- பாத்திமா விஜய் ஆண்டனி, மீரா விஜய் ஆண்டனி.
மக்கள் தொடர்பு :- நிகில் முருகன்.
ரேட்டிங் :- 3.5./5.
இளம் வயதில் கணவரை இழந்து விதவையான கதையின் நாயகி ஸ்வாசிகா, தன்னுடைய இரண்டு மகன்கள் மூத்த மகன் அஜய் திஷான், இளைய மகன் சக்தி இவர்களுடன் வாழ்ந்து வருகிறார்.
தன் எண்ணத்தை மூத்த மகன் அஜய் திஷானிடம் சொல்லும் போது முதலில் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்க, பின்பு சமாதானம் ஆகிறார்.
தனது மூத்த மகன் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் தன் அம்மாவிற்கு மறு திருமணம் செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள்.
நான்கு ஆண்டுகள் கழித்து தன்னுடைய அம்மாவின் மறுமணம் செய்ய விரும்பியதற்கு மதிப்பளிக்கும் வகையில் மூத்த மகன் அஜய் திஷான், தனது அம்மாவிற்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.
அம்மாவிற்கு மறுமணம் செய்து வைக்க முத்த மகன் அஜய் திஷான் முடிவுக்கு இளைய மகன் சக்தி எதிர்ப்பு தெரிவிக்க அதன் பிறகு ஆதரவு தெரிவிக்க, இரண்டு மகன்களும் சேர்ந்து தனது அம்மாவுக்கு மறு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்கள்.
ஆனால், தன்னுடைய சொந்த மாமா குடும்பமும், மற்றும் ஊர் மக்களும் கதையின் நாயகி ஸ்வாசிகா, மறுமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
சொந்த பந்தங்கள் மற்றும் ஊர் மக்களின் எதிர்ப்புகளை மீறி இரண்டு மகன்களும் இனைத்து தன் அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்தார்களா? மறுமணம் செய்து வைக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘நூறு சாமி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘நூறு சாமி’ திரைப்படத்தில் கதையின் நாயகியாக ஸ்வாசிகா, நடித்திருக்கிறார்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஸ்வாசிகா, செல்வி என்ற கதாபாத்திரத்தையும், அவருடைய மன போராட்டங்களையும் தன் நடிப்பில் மூலம் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என தனது விருப்பம், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகனின் செயலை கண்டு அதிர்ந்து போவது, மறுமணம் பிறகு அதே மகன்களை பிரிய வேண்டிய சூழலை நினைத்து கதறுவது, தனிமையில் தன் ஆதங்கத்தை லிட்டில் உள்ள மின் விசிறியிடம் பேசுவது என்று திரைப்படம் முழுவதையும் தன் நடிப்பால் ஒற்றை ஆளாக தாங்கிப் பிடித்திருக்கிறார்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனியின் நடிப்பு திரைப்படத்திற்கு பெரும் மிகப்பெரிய அளவில் அடையாளத்தை கொடுத்திருக்கிறது.
கதையின் நாயகி ஸ்வாசிகாவின் மகன்கள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜய் திஷான், சக்தி, இருவரும் இணைந்து போட்டி போட்டு நடித்து இருக்கிறார்.
சக்தி ஜோடியாக நடித்திருக்கும் பாடினி குமார், அஜய் திஷான் ஜோடியாக நடித்திருக்கும் காவ்யா அனில், கருணாஸ், கன்னியாஸ்திரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லிஜோ மோல் ஜோஸ், பாலாஜி சக்திவேல், வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள்தாஸ், திருமணம் புரோக்கர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மூர்த்தி, காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி என அனைவரும் கொடுத்த வேலையை எந்த விதமான குறையும் இல்லாமல் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ்.பி.தர்ஷன் கிர்லோஷ் ஒளிப்பதிவு மூலம் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் இசையில் பாடல்கள் மற்றும் இசையில் பின்னணி இசை கதை திரைக்கதை மற்றும் காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் உயிரூட்டியிருக்கிறது.
உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதை மறுமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களையும் ஏற்றுக்கொள்ளும்படி திரைக்கதை மற்றும் காட்சிகளை அதை சினிமா பாணியில் மிக சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் சசி,
மொத்தத்தில், ‘நூறுசாமி’ திரைப்படம் மறுமணம் செய்ய விரும்பும் பெண்களின் ஆழ்மனதின் பிரதிபலிப்பு .



