“தொலச்சவனுக்குத்தான் வலி புரியும்” எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘ஃபேமிலி பாய்’ டீசர் அதிரடி டிசம்பர் 11 முதல் உலகமெங்கும் வெளியாகிறது !
“தொலச்சவனுக்குத்தான் வலி புரியும்” எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘ஃபேமிலி பாய்’ டீசர் அதிரடி டிசம்பர் 11 முதல் உலகமெங்கும் வெளியாகிறது !
சென்னை 27 அக்டோபர் 2026 நடிகர் சூர்யாவால் தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகரும், இயக்குநருமான மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஃபேமிலி பாய்- Family Boy’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபேமிலி பாய்- Family Boy’ திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார் , நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் கே கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார்.
படத்தொகுப்பு பணிகளை ஜிஜேந்திரன். V கவனிக்க, கலை இயக்கத்தை C. K. முஜிபுர் ரஹ்மான் மேற்கொண்டிருக்கிறார்.
உண்மை சம்பவத்தை தழுவி ஃபேமிலி டிராமா ஆக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மெக்கானிக் பிக்சர்ஸ் – (Mechanic Pictures) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மித்துன் மாணிக்கம் தயாரித்திருக்கிறார்.
அவருடன் மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP – Milliennials Movie Production L L P நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் முஹம்மத் கனி ஃபைசல்- டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.













