‘பெத்தி’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இராணி, சுருதிஹாசன் மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- புச்சி பாபு சனா.
ஒளிப்பதிவாளர் :- ஆர் . ரத்னவேலு
படத்தொகுப்பாளர் :- நவீன் நூலி.
இசையமைப்பாளர் :- A.R. ரஹ்மான்.
தயாரிப்பு நிறுவனம் :- மைத்ரி மூவி மேக்கர்ஸ், விருத்தி சினிமாஸ்.
தயாரிப்பாளர் :- வெங்கட சதீஷ் கிலாரு, ஈஷான் சக்சேனா.
மக்கள் தொடர்பு :- யுவராஜ்.
ரேட்டிங் :- 3.5./5.
இந்திய அரசின் பதிவிலேயே இல்லாத மலைவாழ் மக்கள் வாழும் கிராமத்திற்கு பெயரே இல்லாமல் அங்கு வாழும் ஊர் மக்களுக்கு அடையாளமே இல்லாத ஊர் மக்களுக்கு அங்கீகாரம் இல்லாத அவர்களது வாழ்க்கை, என்று தங்களுக்கான அடையாளத்திற்காக போராடுகிறார்கள்.
அந்தகிராமவாசியான கதாநாயகன் ராம்சரண், அதே ஊரில் உள்ள சர்க்கரை ஆலையில் கூலியாக வேலை பார்த்து வருகிறார்.
கதாநாயகன் ராம்சரண் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு அதே சர்க்கரை ஆலையில் போலியாக வேலை பார்த்து வரும் நிலையில் அங்கு சம்பளம் குறைவாகவே வழங்கப்படுகிறது.
சம்பளம் குறைவாகவே வழங்கும் பிரச்சினையை சர்க்கரை ஆலை உரிமையாளரிடம் முறையிட்டாலும், ‘அடையாளமே இல்லாத மலைவாழ் மக்களாக பிறந்த உங்களுக்கு முழு சம்பளம் ஒரு கேடா…’ என்ற பதில் மட்டுமே கிடைப்பதால் மலைவாழ் மக்கள் பரிதவித்து போகிறார்கள்.
இதையடுத்து கிரிக்கெட்டில் விளையாட்டில் மிகப்பெரிய ஆளாக இருக்கும் கதாநாயகன் ராம்சரண், அங்கு நடக்கும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடும் நிலையில் அந்த விளையாட்டில் கதாநாயகன் ராம் சரணுக்கு அவமானம் ஏற்படும் நிலையில் கிரிக்கெட் விளையாட்டை அடியோடு கைவிடுகிறார்.
அதன் பிறகு குஸ்தி வாத்தியாரிடம் குஸ்தி கற்றுக்கொண்டு இந்த விளையாட்டிலும் கதாநாயகன் ராம் சரண் முதன்மையாக வருகிறார்.
கதாநாயகன் ராம் சரண், தங்களுக்கான அடையாளம் மற்றும் தனது கிராம மக்களின் அங்கீகாரம், விளையாட்டு போட்டியில் சாதித்தால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயணப்படுகிறார்.
கதாநாயகன் ராம் சரண் பயணிக்கும் பயணத்தில் எதிர்ப்பு, ஏமாற்றம், சதி, எதிர்பாராத சோதனை என்று பல தடைகளை வருகிறது.
அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து வெற்றியை நெருங்கும் நேரத்தில் கதாநாயகன் ராம் சரண் இனிமேல் எந்தவிதமான எந்த ஒரு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவே முடியாத நிலை உருவாகிறது.
என்ன தடை எப்படிப்பட்ட தடைகள் வந்தாலும் தனது முயற்சியை கைவிடாத கதாநாயகன் ராம் சரண், வேறு ஒரு வழியில் சாதனை புரிந்து தனது மலை கிராமத்திற்கு பெயரும் தனது கிராமத்தில் உள்ள மக்களுக்கு அடையாளமும் கிடைக்க வேண்டும் என கதாநாயகன் ராம் சரண் நினைத்தை செய்து முடித்தாரா? முடிக்கவில்லையா? மலைவாழ் கிராம மக்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததா? கிடைக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘பெத்தி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘பெத்தி’ திரைப்படத்தில் கதாநாயகனாக ராம் சரண் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் ராம் சரண், இந்த ‘பெத்தி’ திரைப்படத்திற்காக கிரிக்கெட் விளையாட்டு மற்றும் குஸ்தி விளையாட்டு ஓட்டப்பந்திய வீரருக்கான உடல் மற்றும் ஆற்றலோடு கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது.
தன் மலைவாழ் மக்களுக்காக அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்று தருவதற்காக பல தடைகளை தாண்டிய அவருடைய உணர்வுப்பூர்வமான நடிப்பால், மட்டுமல்லாமல் உடல் மொழி துடிப்பான நடிப்பின் மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவனத்தை ஈர்த்துக் கொள்கிறார்.
இந்த ‘பெத்தி’ திரைப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஜான்வி கபூர் திரைப்படத்தில் அவருக்கும் பெரிய வேலை ஏதும் இல்லை என்பதால் வழக்கமான கமர்ஷியல் கதாநாயகியாக வலம் வருகிறார்.
குஸ்தி வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாரின் வசன உச்சரிப்பு மற்றும், செயலும் கம்பீரமாக இருப்பதோடு, ஒரு குஸ்தி வாத்தியாருக்கான அனைத்து அசைவுகளையும் தனது உடல்மொழியில் கதாபாத்திரத்திற்கு மிக சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
சுருதிஹாசன் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து ஆடி விட்டு சென்றிருக்கிறார்.
ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இராணி ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலுவின் ஒளிப்பதிவு மூலம் கிரிக்கெட் விளையாட்டு குஸ்தி, போட்டி ஓட்டப்பந்தயம் என அனைத்து விளையாட்டு போட்டிகளையும் பிரமாண்டமாகவும், விறுவிறுப்பாகவும் காட்சிகளை அனைத்தும் பிரமாண்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்
இசையமைப்பாளர் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் முணு முணுக்க வைத்தாலும் பின்னணி இசை திரைக்கதைக்கு உயிரூட்டியிருக்கிறது.
நமது இந்திய நாடு வல்லரசு நாடு என்ற அடையாளத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இந்த நவீன இந்தியாவில், உள்ள கிராமத்திற்கு பெயரும் அடையாளமும் இல்லாத பல கிராமங்கள் இருப்பதையும், அங்கு வாழும் மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் இருப்பதையும் ஒரு விளையாட்டு வீரனால் ஒரு சமூகத்திற்கான அடையாளத்தை பெற்றுக் தர முடியும் என்பதை உண்மைக்கு நெருக்கமாக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் புச்சி பாபு சனா,
மொத்தத்தில், ‘பெத்தி’ கஷ்டங்கள் அனைத்தும் திரையில் தெரிகிறது.



