தமிழக அரசின் சேவைகள் அனைத்திலும் ஊழல் லஞ்சப் பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

சென்னை : 28 டிசம்பர் 2020

அரசு அலுவலங்களில் அரசு அதிகாரிகளுக்கு பணம் கொடுத்தால் எதையும் சாதித்து விடலாம் என்பதே வழக்கமாகி விட்டது.

அரசு அலுவலகங்களில் மேல் அதிகாரிகள் முதல் பியூன் வரை பணம் வாங்குவதே குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள்.

ஒட்டு போடும் மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் அதுலே வழக்கமாகிவிட்டது.

இந்த நிலையில் அரசியல்வாதிகள் போட்ட முதலீட்டை பணத்தை எடுப்பதிலேயே மட்டுமே குறியாக உள்ளனர்.

அரசு அலுவலகத்தில் அதிகாரிகளை கேட்கவே வேண்டாம்.

பிறப்பு சான்றிதழ் முதல் ஓட்டுனர் உரிமை, மனைப் பட்டா தொடங்கி இறப்பு சான்றிதழ் வரை ஊழலில் ஊறிப்போயுள்ளது.

இந்த நிலையில் அரசின் ஒவ்வொரு சேவைக்கும் எவ்வளவு பணம் லஞ்சமாக பெறப்படுகிறது என்பதை மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்…

பிறப்பு முதல் இறப்பு வரையிலான சான்றிதழ்களுக்கும், சேவைகளுக்கும் தமிழகம் முழுக்க நடைமுறையில் இருக்கும் லஞ்சப் பட்டியல் இது மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா? மறக்க முடியுமா? #நான்_கேட்பேன்

error: Content is protected !!