பிக்பாக்கெட் மாஃபியா பற்றிய திரைப்படம் “பிக்பாக்கெட்” பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது !
பிக்பாக்கெட் மாஃபியா பற்றிய திரைப்படம் “பிக்பாக்கெட்” பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது !சென்னை 17 ஜூன் 2025 விதா ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் படத்தொகுப்பாளரும், இயக்குனருமான P.R விஜய் தயாரிக்கும் படத்திற்கு ” பிட்பாக்கெட்” Pick Pocket” என்று மிக வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர்.
P. R. விஜய், யோகலட்சுமி, பவன் கிஷோர், சுந்தர்,அலெக்ஸ்,இயன், கிறிஸ்டியன், சந்தீப், காந்திபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பிரேம், இசை- ஷாஜகான், எடிட்டிங்- அருண்குமார் சவுண்ட் மிக்சிங்- பிரேம், Di – ஜியாவுதீன், மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ் ,தயாரிப்பு – P. R. விஜய்ஃ கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் – J. S. ஜூபேர் அகமத்.
இவர் ஓ.டி.டியில் வெளியாகி பிரபலமான ரிவால்வர் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படம் பற்றி இயக்குனர் J. S. ஜூபேர் அகமத் பகிர்ந்தவை…
ஒரே நாள் இரவில் நடக்கும் கதை இது இரவு 7 மணிக்கு துவங்கி அதிகாலை 4 மணிக்கு முடிவடையும் திரைக்கதை இது. பொதுவாக திரைப்படங்களில் செயின் பறிப்பு, தங்க கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றை வைத்து திரைக்கதை அமைத்திருப்பார்கள். ஒரு சில படங்களில் பிட்பாக்கெட் பற்றி ஒரு சில காட்சிகள் மட்டுமே இருக்கும் அதை பெரிதாக யாரும் கேரி பண்ணியது கிடையாது.
ஆனால் இந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க பிட்பாக்கெட்டை மையமாக வைத்து முழு திரைக்கதையும் உருவாக்கி இருக்கிறேன்.
பிக்பாக்கெட் திருடர்களை நாம் இன்றுவரை சாதாரணமாக தான் பார்த்து வருகிறோம் அவர்களுக்கு பின்னால் ஒரு பெரிய மாஃபியா கும்பல் செயல் பட்டு கொண்டிருக்கிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்கிறோம் என்றார் இயக்குனர் J. S.ஜூபேர் அகமத்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று புதுச்சேரியில் பூஜையுடன் துவங்கியது.
புதுச்சேரி முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் படப்பிடிப்பினை துவக்கி வைத்தார்.
Related posts:
சாந்தி செளந்தரராஜன் திரைப்படம் பூஜையுடன் முதல் கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் துவங்கியது.
புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “பெண்டுலம்” பூஜையுடன் படப்பிடிப்பு இனிதே துவங்கியது !!!
இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், ஆரி அர்ஜுனன் நடிப்பில், “ரிலீஸ்” திரைப்படம் இன்று இனிதே பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது !!
இயக்குனர் விஜய்சந்தர் தயாரிப்பில் ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது!
நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், புதுமையான ஆக்சன் திரைப்படம், பூஜையுடன் இனிதே துவங்கியது !!
நடிகர் சிபி சத்யராஜ் நடிக்கும் புரடக்சன் நம்பர் 1 திரைப்படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது!
இயக்குநர் நடிகர் M.சசிகுமார் நடிப்பில் “பகைவனுக்கு அருள்வாய்” திரைப்படம் இன்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.
நடிகர் அமித் ஜாலி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் லாக்டவுன் பெங்களூரில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.
“ஸ்வீட்டி நாட்டி” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று பூஜையுடன் துவங்கியது !
நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் தமிழ்படம் புகழ் C.S.அமுதன் இணையும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது !

