சமுக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகும் புளூஸ்டார் திரைப்படத்தின் சாம் கதாபாத்திரத்தின் கவிதைகள் !!
சமுக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகும் புளூஸ்டார் திரைப்படத்தின் சாம் கதாபாத்திரத்தின் கவிதைகள் !!
சென்னை 29 ஜனவரி 2023 கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு சமீபத்தில் வெளியான புளூஸ்டார் திரைப்படம்.
மக்கள் மத்தியில் பெரும் வெற்றி திரைப்படமாகியது.
குறிப்பாக நடிகர் ப்ரித்வி பாண்டியராஜனின் சாம் கதாபாத்திரம் வெகுவாக ரசிக்கும்படியாக இருந்தது.
இவர் வரும் காட்சிகளில் தியேட்டரில் விசில் சத்தம் .
இன்னிலையில் திரைப்படத்தில் அவர் எழுதிய கவிதைகள் என்கிற பெயரில் இணையத்தில் வைரலாகிவருகிறது.
எத்தனை பேருக்குத்தெரியும் எனக்காக நவம்பரில் பூத்த டிசம்பர் பூ என்று.
#புளூஸ்டார் டீம்.
கவிஞர் சாம்.
கிரிக்கெட்டில் கேட்ச் பிடிக்க யோசிக்கிறேன் ஏற்கனவே உன்னை பிடித்துவிட்டதால்.
கவிஞர் சாம்.
#புளூஸ்டா டீம் ஆல்ரவுண்டர்.

விசிறி இருந்தும் வியர்கிறது நீ என்னை விசிறி எரிந்த காரணத்தால்.
இப்படிக்கு கவிஞர் சாம்,
#புளூஸ்டார் டீம் , அரக்கோணம்.
அன்று முதல் அசுத்தமாக அலைகிறேன் நீ என்னை “சுத்தமாக” பிடிக்கவிலை என்று சொன்ன ஒரே காரணத்திற்காக.
கவிஞர் சாம்.
#புளூஸ்டார் டீம் ஆல் ரவுண்டர், அரக்கோணம்.
அந்த இருபது ரூபாய் தாளிலுள்ள காந்தியின் மீது உன் விரல் பட்டதும் சமாதியில் புரண்டு படுத்திருப்பார், அன்பே, உயிரோடிருக்கும் என்னை எப்போது புரட்டுவாய்.
கவிஞர் சாம்.

இதுவடையை வாயிலிருந்து சற்று மெதுவாக வயிற்றில் இறங்கு இதயத்தில் என் காதலி இருக்கிறாள்.
கவிஞர் சாம்
இப்படிக்கு கவிஞர் சாம்,
#புளூஸ்டார் டீம் , அரக்கோணம்.











