ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்.
சென்னை : 21 அக்டோபர் 2020இப்படத்தின் துவக்க விழா இன்று காலை 9 மணி அளவில் சென்னை கைகான் குப்பத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் எல் கே சுதீஷ், இயக்குனர்கள் பாக்கியராஜ், விஜய் மில்டன், சரவணன், பார்த்திபன், தயாரிப்பாளர் கே ஆர் பிலிம்ஸ் சரவணன், ஜாகுவார் தங்கம், PRO டைமண்ட் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
சைக்கோ திரில்லராக உருவாகும் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கிஷன் ராஜ். ஒளிப்பதிவு சிவ சாரதி, இசைஅமைப்பாளராக விக்கி மற்றும் ஹரி, படத்தொகுப்பு ராம்நாத், கலை பழனி குமார், சண்டைப்பயிற்சி ரக்கர் ராம்.
இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரகாஷ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மியா யுக்தா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் கலை இயக்குனர் கிரண், போஸ் வெங்கட், KPY பாலா, அமுதவாணன், வில்லனாக அஜய் கண்ணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கி சென்னை, கோவை, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற உள்ளது.
தனது மக்கள் தொடர்பாளர் எம்.பி. ஆனந்த் தயாரிக்கும் படத்தை தயாரிப்பாளர் எல்.கே சதீஷ் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, கிளாப் அடித்து துவக்கி வைத்தனர்.
Related posts:
1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதையில் சுந்தர் சி , ஜெய் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘பட்டாம்பூச்சி’.!
டர்மெரிக் மீடியா மற்றும் ஆஹா ஓடிடி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்!
ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்கும், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், போனி கபூர் வழங்கும் உதயநிதி ஸ்டாலினின் “நெஞ்சுக்கு நீதி”படத்தின், டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது !
சிவஞானம் பிலிம் புரொடக்சன் சார்பில் சிவஞான ஹரி மற்றும் எம்.பி.அழகன் இருவரும் இணைந்து இந்த “சில்லாட்ட” படத்தை தயாரித்துள்ளனர்.
அந்தமான் ரியல் கிரியேஷன்ஸ் வழங்கும் வெங்காய வெடி’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்.
நடிகர் கதிர், நட்டி, இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் “யூகி” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!
மைண்ட் ட்ராமா புரடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் நினைவோ ஒரு பறவை.
தெலுங்கு நடிகர் சந்தீப் மற்றும் சிம்ஹா இணைந்து நடிக்கும் பான் இந்திய திரைப்படம் ‘ராவண கல்யாணம்’!!
உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம.
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து “தி மாயன்” ஆங்கில படத்தின் 1st லுக் ஐ வெளியிட்டுள்ளனர்.

