மக்களை தேடி நேரில் சென்று உதவி செய்த ராகவா லாரான்ஸ் தனது அடுத்தகட்ட உதவும் முயற்சியை நேற்று துவங்கினார்!!
மக்களை தேடி நேரில் சென்று உதவி செய்த ராகவா லாரான்ஸ் தனது அடுத்தகட்ட உதவும் முயற்சியை நேற்று துவங்கினார்!!
சென்னை 03 செப்டம்பர் 2023 நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் தனது சேவையின் அடுத்தக்கட் முயற்சியாக இயலாதவர்களை தேடிச் சென்று உதவுவதாக அறிவித்திருந்தார்.
அதனை தற்போது நடைமுறைப் படுத்தும் நோக்கத்தில் நேற்று பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரில் வசிக்கும் பார்வையற்ற சக்திவேலின் மகன் ஜெகதீஸ், மற்றும் கே.கே. நகரில் வசிக்கும் தாய், தந்தையை இழந்த மிருதுளா, பிரியா, மாற்றுத்திறனாளி தம்பதிகளான செல்வம், செல்வி ஆகியோரது குழந்தை ஹெப்ஷிகா மற்றும் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பெற்றெடுத்த சீனிவாசன் காயத்ரி குழந்தைகளான லக்ஷன்யா, லக்ஷிகா லக்ஷா, லக்ஷன் ஆகிய அனைத்து குழந்தைகளின் படிப்பு செலவிற்கான பணத்தை அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று வழங்கினார்.
என்னை இவர்களுக்கு உதவும் சேவகனாக படைத்ததற்கு கடவுளுக்கு நான் நன்றி சொல்கிறேன் என்று நெகிழ்வோடு கூறியதோடு இந்த நேரடி பயணம் தொடரும் என்றார்.