பயில்வான் ரங்கநாதன் மூக்கை உடைத்த மருதம் திரைப்படத்தின் கதாநாயகி ரக்‌ஷனா !

Lபயில்வான் ரங்கநாதன் மூக்கை உடைத்த மருதம் திரைப்படத்தின் கதாநாயகி ரக்‌ஷனா !

சென்னை 09 அக்டோபர் 2025 இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், கதாநாயகனாக நடிகர் விதார்த் நடிப்பில், விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ளது “மருதம்” திரைப்படம்.

இந்த மருதம் திரைப்படத்தில், கதாநாயகியாக ரக்‌ஷனா, மற்றும் அருள் தாஸ், லொள்ளு சபா மாறன், இயக்குநர் சரவணன் சுப்பையா, இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

இந்த ‘மருதம்’ திரைப்படம் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகி உள்ள நிலையில், இன்று இந்த மருதம் திரைப்படத்தை பத்திரிகயாளர்களுக்கு திரையிடப்பட்டது.

இந்த திரைப்படம் குறித்து பேசிய நடிகர் விதார்த், நானும் உங்களுடன் சேர்ந்துதான் இந்த திரைப்படத்தை பார்த்தேன் லிரைப்படம் மிகவும் நன்றாக வந்து உள்ளது.

திரைப்படத்தின் கதாநாயகியான ரக்ஷனா மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

திரைப்படத்தில் சிறுவனாக நடித்த பையன், எங்களை விட, மிகவும் பிரமாதமாக நடித்து இருக்கிறார்.

இசையமைப்பாளரின் இசை திரைப்படத்திற்கு மேலும் வலு சேர்த்து இருக்கிறது.

அனைவருக்கும் நான் நன்றியை சொல்லிக்கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது உங்களுடைய கையில் தான் இருக்கிறது என்றார்.

இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், திரைப்படத்தின் கதாநாயகியான ரக்ஷனாவிடம் முதல் படத்திலேயே தாயாக நடித்து விட்டால், அடுத்த படத்தில் நடிப்பதற்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும் என கேட்டார்.

பயில்வான் ரங்கநாதன், கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கதாநாயகி ரக்ஷனா, நான் இரண்டாவது படத்தில் நடித்து விட்டேன்.

அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

அந்த படத்தின் இயக்குனர் என்னை இப்படி கேட்கவில்லை என சரியான பதிலடி கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் உன்னுடைய நன்மைக்கு தான் சொல்கிறேன்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அப்படி நடித்ததால் தான் அவருக்கு பட வாய்ப்பு இல்லை என்றார்.

சரியான பதிலடி இதற்கு பதில் அளித்த கதாநாயகி ரக்ஷனா, ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

அந்த படத்தின் மூலம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.

அது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூக்கு இன்று சினிமாவில் தனி பெயர் இருக்கிறது.

அதேபோல, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து விட்டால, அதன் பிறகு தொடர்ந்து அம்மா கதாபாத்திரத்தில் தான் நடிப்பார்கள் என்கிற ரூல் இங்கே இருக்கிறது.

அப்படி ஒரு ரூலை இங்கே இருப்பவர்கள் வகுத்து இருக்கிறார்கள்.

அந்த ரூலை யாராவது பிரேக் செய்ய வேண்டும்.

அதை உடைக்கா சினிமாவிற்கு யாராவது வர வேண்டும், அது நானாகவே இருக்கிறேன் என சரியான பதில் கொடுத்தார்.

சரியான பதிலடி கொடுத்ததால் பயில்வான் ரங்கநாதன் தலை குனிந்தவாறு அங்கிருந்து கிளம்பினார்.

error: Content is protected !!