02/06/2025 இன்றைய ராசிபலன்கள்
02-06-2025 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.
தமிழ் ஆண்டு, தேதி – விசுவாசுவ, வைகாசி 19
நாள் – கீழ் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை
திதி
சுக்ல பக்ஷ சப்தமி – Jun 01 07:59 PM – Jun 02 08:35 PM
சுக்ல பக்ஷ அஷ்டமி – Jun 02 08:35 PM – Jun 03 09:56 PM
நட்சத்திரம்
மகம் – Jun 01 09:36 PM – Jun 02 10:55 PM
பூரம் – Jun 02 10:55 PM – Jun 04 12:58 AM
கரணம்
கரசை – Jun 01 08:00 PM – Jun 02 08:11 AM
வனசை – Jun 02 08:11 AM – Jun 02 08:35 PM
பத்திரை – Jun 02 08:35 PM – Jun 03 09:10 AM
யோகம்
வியாகாதம் – Jun 01 09:11 AM – Jun 02 08:20 AM
ஹர்ஷணம் – Jun 02 08:20 AM – Jun 03 08:08 AM
வாரம்
திங்கட்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்.
சூரியோதயம் – 6:04 AM
சூரியஸ்தமம் – 6:30 PM
சந்திரௌதயம் – Jun 02 11:46 AM
சந்திராஸ்தமனம் – Jun 03 12:20 AM
அசுபமான காலம்
இராகு – 7:38 AM – 9:11 AM
எமகண்டம் – 10:44 AM – 12:17 PM
குளிகை – 1:51 PM – 3:24 PM
துரமுஹுர்த்தம் – 12:42 PM – 01:32 PM, 03:11 PM – 04:01 PM
தியாஜ்யம் – 10:16 AM – 11:57 AM
சுபமான காலம்
அபிஜித் காலம் – 11:52 AM – 12:42 PM
அமிர்த காலம் – 08:22 PM – 10:03 PM
பிரம்மா முகூர்த்தம் – 04:28 AM – 05:16 AM
ஆனந்ததி யோகம்
துர்வாஞ்சம் Upto – 10:55 PM
துவஜ
வாரசூலை
சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்
சூர்யா ராசி
சூரியன் ரிஷபம் ராசியில்
சந்திர ராசி
சிம்மம் (முழு தினம்)
திங்கள் கிழமை ஹோரை
காலை
06:00 – 07:00 – சந் – சுபம்
07:00 – 08:00 – சனி – அசுபம்
08:00 – 09:00 – குரு – சுபம்
09:00 – 10:00 – செவ் – அசுபம்
10:00 – 11:00 – சூரி – அசுபம்
11:00 – 12:00 – சுக் – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – புத – சுபம்
01:00 – 02:00 – சந் – சுபம்
02:00 – 03:00 – சனி – அசுபம்
மாலை
03:00 – 04:00 – குரு – சுபம்
04:00 – 05:00 – செவ் – அசுபம்
05:00 – 06:00 – சூரி – அசுபம்
06:00 – 07:00 – சுக் – சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
02-06-2025 இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமூகம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். நுட்பமான விஷயங்களை புரிந்துகொள்வீர்கள். சக ஊழியர்களிடத்தில் அமைதி வேண்டும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் பிறக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உறுதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
பரணி : புரிதல் உண்டாகும்.
கிருத்திகை : தாமதங்கள் விலகும்.
ரிஷபம்
வியாபாரம் தொடர்பான பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்துகொள்வீர்கள். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : ஆரோக்கியம் மேம்படும்.
ரோகிணி : ஆதாயம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
மிதுனம்
குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். மனதிற்கு திருப்தியான சூழல் அமையும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த ஒருவிதமான சோர்வுகள் நீங்கும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : திருப்தியான நாள்.
திருவாதிரை : ஆர்வம் ஏற்படும்.
புனர்பூசம் : அங்கீகாரம் கிடைக்கும்.
கடகம்
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தோற்றப் பொலிவு அதிகரிக்கும். சில வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடும். வேலையாட்களின் இடத்தில் பொறுமை வேண்டும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூசம் : அனுகூலம் ஏற்படும்.
ஆயில்யம் : பொறுமை வேண்டும்.
சிம்மம்
சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளால் தடுமாற்றம் உண்டாகும். உயர்கல்வியில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களிடத்தில் மனம் விட்டு பேசுவதால் புரிதல் அதிகரிக்கும். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் அதிகரிக்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்
மகம் : எண்ணங்கள் மேம்படும்.
பூரம் : தடுமாற்றம் உண்டாகும்.
உத்திரம் : புரிதல் அதிகரிக்கும்.
கன்னி
உடன்பிறந்தவர்களால் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளவும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மாற்றத்தை உண்டாக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
அஸ்தம் : அனுபவம் உண்டாகும்.
சித்திரை : வாய்ப்புகள் அமையும்.
துலாம்
குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பேச்சுக்களுக்கு மதிப்பு உண்டாகும். இறை வழிபாடு சார்ந்த பயணங்கள் கைகூடும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதுவிதமான ஆசைகள் பிறக்கும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
சித்திரை : ஒத்துழைப்பு ஏற்படும்.
சுவாதி : பயணங்கள் கைகூடும்.
விசாகம் : மேன்மை ஏற்படும்.
விருச்சிகம்
பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உறவுகளின் வழியில் ஆதாயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை தரும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் செல்வாக்கு அதிகரிக்கும். மருத்துவப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வீடு, வாகனங்களை சீர் செய்வீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : ஈடுபாடு உண்டாகும்.
அனுஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
கேட்டை : அனுகூலம் ஏற்படும்.
தனுசு
பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் லாபம் அடைவீர்கள். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் மறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மூலம் : ஏற்ற, இறக்கமான நாள்.
பூராடம் : நெருக்கம் அதிகரிக்கும்.
உத்திராடம் : போட்டிகள் மறையும்.
மகரம்
சிந்தனைகளில் கவனம் வேண்டும். அரசு வழி காரியங்களில் பொறுமை வேண்டும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். சமூகம் தொடர்பான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மற்றவர்கள் பணிகளையும் பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
உத்திராடம் : பொறுமை வேண்டும்.
திருவோணம் : குழப்பமான நாள்.
அவிட்டம் : சோர்வுகள் உண்டாகும்.
கும்பம்
திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். சுப நிகழ்ச்சிகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். தந்திரமான சில விஷயங்களால் லாபத்தை உண்டாக்குவீர்கள். அதிகாரிகளிடத்தில் உங்களின் முக்கியத்துவம் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சதயம் : அனுகூலமான நாள்.
பூரட்டாதி : முக்கியத்துவம் மேம்படும்.
மீனம்
வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசவும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடலில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : அறிமுகம் ஏற்படும்.
உத்திரட்டாதி : விவேகம் வேண்டும்.
ரேவதி : சோர்வுகள் விலகும்.





