அடுத்த வருடம் கூட திரையரங்குகளை திறக்க தயார்.; தயாரிப்பாளர்கள் கெடுபிடியால் திரையரங்குகள் அதிபர்கள் அதிரடி முடிவு.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலைத் தடுக்க மார்ச் முதல் கடந்த ஏழு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கிறது..
இந்த நவம்பர் மாதம் 10ம் தேதி முதல் திரையரங்குகள் திறந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
எனவே திரையரங்குகளை திறக்க திரையரங்குகளின் உரிமையாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
ஆனால் இந்த நிலையில், VPF கட்டணங்களை எங்களால் செலுத்த இயலாது என்றும் அதனை திரையரங்கு உரிமையாளர்கள்தான் செலுத்த வேண்டும் என நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இது தொடர்பான அவரது அறிக்கையில்…
“திரையரங்கு உரிமையாளர்களும் புரொஜெக்டர் நிறுவனங்களும் தொடர்ந்து VPF கட்டணங்களை வசூலித்து வருகிறார்கள்.
இனிமேல் எங்களால் அதனைச் செலுத்த இயலாது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும்வரை திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை தொடர்பாக திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது..
இந்த பிரச்சினை இப்போது பேசப்பட வேண்டிய அவசியமில்லை.
நவம்பர் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளை மட்டும் நிரப்பி திரையரங்குகளை திறக்க முடிவு செய்துள்ள்ளோம்.
எங்கள் தரப்பில் நஷ்டம் ஏற்படும் என்று தெரிந்தாலும் தொழில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம்.
தற்போது தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து புது கோரிக்கைகளை வைக்கும்போது அதை ஏற்க முடியாது.
தயாரிப்பாளர்கள் இந்த முடிவை எடுத்தால் மேலும் 2 மாதங்களுக்கு (2020 டிசம்பர் வரை) திரையரங்குகளை மூடிவைப்பதால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை” திருப்பூர் சுப்பிரமணியன் என கூறியுள்ளார்