“சட்டென்று மாறுது வானிலை” திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- ஜெய், யோகி பாபு, மீனாட்சி கோவிந்தராஜன், கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், ஆதியா கதிர், அஜய், சரவண சுப்பையா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பாபு விஜய்.

ஒளிப்பதிவாளர் :- ரிச்சர்ட் எம் நாதன்.

படத்தொகுப்பாளர் :- டார்லிங் ரிச்சர்ட்சன்.

இசையமைப்பாளர் :- கிரிஷ் கோபாலகிருஷ்ணன்.

தயாரிப்பு நிறுவனம் :- பிவி புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- இயக்குநர் பாபு விஜய்.

மக்கள் தொடர்பு :- சதீஷ் (AIM)

ரேட்டிங் :- 2.5./5.

தாய் தந்தை இல்லாமல் அனாதையான கதாநாயகன் ஜெய், ஐ.டி.  நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

ஒரு பக்கம் இருக்க கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜனின் தந்தை  அமைச்சர் அஜய், கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜனை இரண்டாம் தாரமாக ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.

மறுபக்கம் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜனின் நண்பர் ஒருவர் சொத்துக்காக  திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்.

கதாநாயகன் ஜெய் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜனை  கண்டவுடன் காதல் வயப்படுகிறார்.

அன்று இரவு கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜனை ஒரு மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து கதாநாயகன் ஜெய் காப்பாற்றுகிறார்.

இதன்பிறகு கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் கதாநாயகன் ஜெய் இருவரும் காதலித்து உடனே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் கதாநாயகன் ஜெய் இருவரும் திருமணம்  முடிந்த உடனே  கொடைக்கானலுக்கு ஹனிமூன் செல்கிறார்.

இந்த நிலையில் அங்கு வில்லன் கருடன் ராம் நடத்தி வரும் கொடைக்கானலில் உள்ள விடுதியில் ஹனிமூன் கொண்டாடுவதற்காக கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் கதாநாயகன் ஜெய் இருவரும்
அறை எடுத்து  தங்குகிறார்கள்.

கொடைக்கானலுக்கு ஹனிமூன் முடித்து வந்த பிறகு கதாநாயகன் ஜெய் மற்றும் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு  பிரிந்து விடுகிறார்கள்

மேலும் வில்லன் கருடன் ராம் நடத்தி வரும் விடுதியில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதையும் கதாநாயகன் ஜெய் அறிந்து கொள்கிறார்.

இவ்வளவு பிரச்சனையில்  மத்தியில் கதாநாயகன் ஜெய் மற்றும் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் இருவரும் வாழ்க்கையில்  ஒன்றாக இணைந்தார்களா?,  இணையவில்லையா?, என்பதுதான் இந்த  ‘சட்டென்று மாறுது வானிலை”
திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘சட்டென்று மாறுது வானிலை” திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெய் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஜெய், ஐடி பணிபுரியும் இளைஞராக நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

கதாநாயகி மீனாட்சி உடன் ரொமான்ஸ் காட்சிகளில் காதல், நடனம், நடிப்பு, அழுகை, பாசம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

இந்த ‘சட்டென்று மாறுது வானிலை” திரைப்படத்தில் கதாநாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜன்  கதாநாயகன் ஜெய் மீது வைக்கும் பாசம் தந்தை மீது வெறுப்பு, நண்பன் மீது கோபம் என எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருடன் ராம் மிரட்டி இருக்கிறார்.

கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன்  தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜய் வில்லனுக்கு  இணையாக நடித்திருக்கிறார்.

யோகி பாபுவின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது.

வழக்கம் போல ஆதித்யா கதிரின் டைமிங் காமெடி திரையரங்குகளில் ரசிகர்களின்  சிரிப்பொலி  சரவெடியாக மாற்றுகிறது.

காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீமன் மிக அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் நடித்திருக்கும் மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் மிகச் சிறப்பாக கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அருமையாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு சிறப்பான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

காதல், கிரைம், ஆக்ஷன், திரில்லர் என திரைக்கதை விறுவிறுப்பாக செல்கிறது. மெதுவாக தொடங்கும் திரைக்கதை இறுதியில் வேகம் எடுத்து கமர்ஷியல் திரைப்படத்திற்கு உண்டான அனைத்து அம்சங்களையும் வைத்து திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாபு விஜய்.

மொத்தத்தில் இந்த “சட்டென்று மாறுது வானிலை”  திரைப்படத்தில் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் சிறந்த திரைப்படமாக அமைந்திருக்கும்.

error: Content is protected !!