வெள்ளி விழா நாயகன் நடிகர் மோகன் பிறந்த நாள் மற்றும் 45 வருட திரைத்துறை பயண வெற்றிக்கொண்டாட்டம் !!!

சென்னை 09 அக்டோபர் 2022 வெள்ளி விழா நாயகன் நடிகர் மோகன் பிறந்த நாள் மற்றும் 45 வருட திரைத்துறை பயண வெற்றிக்கொண்டாட்டம் !!!

தமிழ் திரையுலகின் அதிக எண்ணிகையில் வெள்ளிவிழா படங்கள் தந்தவரும், தமிழகமெங்கும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகருமான மோகன் திரைத் துறையில் 45 வருடங்களை நிறைவு செய்ததை அவரது ரசிகர்கள் நேற்று அவரது பிறந்த நாளில் மிகப்பெரிய விழாவாக கொண்டாடினர்.

இவ்விழாவில் நடிகர் மோகன் நடிக்கும் ஹரா படத்திலிருந்து முதல் சிங்கிளாக ஒரு அருமையான பாடல் வெளியிடப்பட்டது.

ஹரா படக்குழுவினருடன் திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

மேலும் தமிழகமெங்குமிருந்து பிரமாண்ட எண்ணிக்கையில் ரசிகர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

இவ்விழாவினில்…

இயக்குநர் விஜய் ஶ்ரீஜி பேசியதாவது…

மோகன் சார் அப்போது மட்டுமல்ல இப்போதும் பிஸியாகவே இருக்கிறார்.

அவரிடம் கதை சொல்ல எனக்கு 2 வருடங்கள் ஆனது.

நிறைய கதைகள் கேட்டாலும் நல்ல படம் என்றால் தான் அவர் ஒப்புக்கொள்கிறார்.

இன்றும் ஷூட்டிங் செல்லும் இடங்களில் அவருக்காக ரசிகர்கள் குவிகிறார்கள்.

இந்தப்படத்தை அவர் ரொம்ப பிடித்து நடித்திருக்கிறார்.

அவருக்கு மிகச்சிறந்த வெற்றிப்படமாக இது இருக்கும்.

அவர் வெற்றிவிழா நாயகன் என்பதை இப்படம் மூலம் மீண்டும் நிரூபிப்பார்.

இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது…

நான் இங்கு ஒரு இயக்குநராக அல்ல ஒரு ரசிகனாக வந்திருக்கிறேன்.

பாலுமகேந்திராவின் மூத்த பிள்ளை அவர், கடைசிப்பிள்ளை நான் என்பது பெருமை எனக்கு. இளம் வயதில் அவரது படங்கள் பார்த்து ரசித்து வளர்ந்தேன்.

இயக்குநரான பின்பும் என் நடிகர்களுக்கு ரொமான்ஸ் காட்சிகளில் அவர் நடித்த காட்சிகளைத்தான் போட்டுக் காட்டுவேன்.

அவரது ஹரா படம் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது விரைவில் அவரோடு இணைந்து படம் செய்யவுள்ளேன்.

இப்படம் வெற்றி பெற வாழ்த்துகள். அனைவருக்கும் நன்றி.

நடிகர் மோகன் பேசியதாவது…

பாலுமகேந்திராவின் மூத்த பிள்ளை நான்.

கடைசிப்பிள்ளை சீனு ராமசாமி இங்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி.

பாலுமகேந்திரா ஒரு மகா கலைஞர் அவருக்கு சினிமாவில் எல்லாமே தெரியும்.

அவரது முதல் படமான கோகிலாவில் அண்ணன் கமலுடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

கமல் சார், ஷோபா மேடம், ரோஜா ரமணி மோகன் ஃபேவரைட் படத்துல கண்டிப்பா கோகிலா இருக்கும்.

பாலுமகேந்திரா ஸ்கூல்ல இருந்து சீனு வந்தது மகிழ்ச்சி.

ஹராவில் என்னை மிக வித்தியாசமாக மாற்றி படமெடுத்திருக்கிறார் விஜய் ஶ்ரீ.

இவருடன் இணைந்தது மகிழ்ச்சி.

அப்பா, மகளுக்குள் உள்ள உறவை சொல்லும் கதை இது.

குஷ்பு உடன் டூயட் இருக்கு உங்கள் அனைவருக்கும் இந்தப்படம் கண்டிப்பா பிடிக்கும்.

நான் படத்தில நடிச்சாலும் நடிக்காட்டியும் என்னுடன் உடன் இருப்பவர்கள் என் ரசிகர்கள் தான்.

அவர்களுக்கு என் பெரிய நன்றி. 45 வருட விழா வேண்டாம் என்றேன்.

ஆனால் என் ரசிகர்கள் வற்புறுத்தியதால் ஒப்புக்கொண்டேன்.

உங்கள் அனைவருக்கும் பிடித்த படமாக ஹரா இருக்கும் நன்றி.

தமிழ் 86, தெலுங்கில் 9, கனடாவில் 6 மற்றும் மலையாளத்தில் 5 என இதுவரை 106 திரைப்படங்களில் நடித்துள்ள மோகன், ஹாரா படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.