ஊரடங்கு காலத்தில் பாதுகாப்புடனும் கட்டுப்பாடுகளுடன் நடந்த படப்பிடிப்பு இயக்குநர் சுந்தர். சி !
சென்னை :15 அக்டோபர் 2020
சுந்தர். சியின் அவ்னி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பத்ரி இயக்குகிறார்.இப்படத்தில் பிரசன்னா, ஷாம் ,அஸ்வின் காக்குமனு, யோகி பாபு, ரித்திகா சென்,ஸ்ருதி மராத்தே ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படப்பிடிப்பு தொடர்ந்து 26 நாட்களாக நடைபெற்று வருகிறது. சென்னை ஈசிஆர் சாலையில் ரோஸ் கார்டன் எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்டு அருகிலுள்ளது.
26 வது நாளாக அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில்
படப்பிடிப்பு அனுபவம் பற்றி அஸ்வின் காக்குமனு பேசும்போது,
அரசின் பாதுகாப்பு முறைகளோடு நடக்கிறது .முதலில் வெப்ப சோதனை நடத்துவதில் இருந்து கிருமி நாசினி பயன்படுத்துவது வரை எல்லாமும் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.ஒருநாள் படப்பிடிப்புத் தளத்திற்கு சுந்தர்.சி சார் வந்தார். எல்லோரிடமும் கலகலப்பாக பேசி ஊக்கப்படுத்தினார்.
கதைப்படி கதாநாயகியின் வீட்டில் நடப்பதாக காட்சி எடுக்கப்பட்டது.
நாயகியாக நடிக்கும் ரித்திகா சென் அன்றுதான் முதல் நாளாக படப்பிடிப்புக்கு வந்திருந்தார்.
அவர் படப்பிடிப்பு அனுபவம் பற்றி பேசும் போது,
“முதலில் எனக்குப் பயமாக இருந்தது. இந்தச் சூழலுக்கு பொருந்துவது கடினமாக இருந்தது .ஆனால் போகப் போக எல்லாம் சரியாகி விட்டது .அந்த சமூக இடைவெளி என்கிற அந்த அசௌகரியத்தை உணரமுடியாத படி அனைவரும் நல்ல ஒத்துழைப்போடு படப்பிடிப்பு நடத்தினார்கள். எனவே முதலில் பயந்திருந்த நான் மெல்ல மெல்ல அந்த சூழலோடு ஒன்றி விட்டேன்.” என்கிறார்.
யோகி பாபு பேசும்போது, “அண்ணன் சுந்தர் சி எனது குடும்ப நண்பர் போன்றவர் .அவரது நிறுவனம் எனது குடும்ப நிறுவனம் போன்ற உணர்வு எனக்கு உண்டு.அவர் எப்போது கூப்பிட்டாலும் நான் வந்து விடுவேன். கதையெல்லாம் கேட்க மாட்டேன் .அப்படித்தான் இந்தப் படத்திலும் கதை கேட்காமல் நடிக்க வந்து விட்டேன் பிறகு வந்து கதையைக் கேட்டபோது அருமையான கதையாக இருந்தது”என்றார்.
26 வது நாளான அன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்து முடிவடைந்தது.
இயக்குநர் பத்ரி பேசும்போது,
குறைந்த ஆட்களைக் கொண்டு 70 பேருக்குள் இருக்குமாறு படப்பிடிப்பு நடத்துவது முதலில் சிரமமாக இருந்தாலும் அதற்கான முன் தயாரிப்புகளைச் சரியாகச் செய்து கொண்டு எந்தக் குறையும் இல்லாமல் நாங்கள் நடத்திக் கொண்டு வருகிறோம். இதற்குக் காரணம் சுந்தர்சி சார் அவர்களிடம் கற்றுக் கொண்ட அந்த திட்டமிடலும் சரியான நேரம் பராமரிப்பதும்தான். அதுமட்டுமல்லாமல் படக்குழு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து கொண்டே இருப்போம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சரியாகத் திட்டமிட்டு இந்த படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறோம்.இன்று இருபத்தி ஆறாவது நாள். எல்லாவற்றையும் விட பாதுகாப்புதான் முக்கியம் என்பதால் எல்லா சிரமங்களையும் அசௌகர்யங்களையும் மறந்துவிட்டு அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்..” என்கிறார்.
செப்டம்பரில் தொடங்கிய இந்த படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் நிலையில் உள்ளது.
Related posts:
நடிகர் ஆர்யா- இயக்குனர் சுந்தர்.சி நடிப்பில் ”அரண்மனை3” ராஜ்கோட்டில் படப்பிடிப்பு ஆரம்பமானது.
சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ உருவாகிறது
ஈகோ பார்க்காமல் அனைவரும் ஒருமுறை இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும் – நடிகர் விஷால்
ஆக்சன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.
இயக்குநர் சுந்தர் சி இயக்கும் அரண்மனை 3 ‘படத்தில் இரண்டு கோடி செலவில் பிரமாண்ட செட்டில் நடைபெற்ற சண்டைக்காட்சி!
நடிகர் விஜய் சேதுபதியுடன் செல்ஃபிக்காக படப்பிடிப்பு தளத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.!
நடிகர் இயக்குநர் சுந்தர்.C நடிப்பில் K.திருஞானம் இயக்கும் “ஒன் 2 ஒன்”.
நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் அரண்மனை 3 திரைப்படத்தை முதலில் பார்த்த ஒரே நபர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மட்டும்தான் இயக்குநர் சுந்தர் சி.
ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி ” படத்திற்காக தொடர்ந்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு கோவாவில் நடந்த உண்மைச் சம்பவங்களை கொண்டு உருவாகி உள்ளது ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி “
ஊரடங்கு காலத்தில் 17000க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவர்கொண்டாவின் – தேவர்கொண்டா அறக்கட்டளை!

