இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவிற்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் !

இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவிற்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் !

சென்னை 10 ஜூன் 2026 ​தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கை. அதில்,

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், இயக்குனர் இமயம் என்று போற்றப்படும் திரு.பாரதிராஜா அவர்கள் காலமாகிவிட்டார் என்ற செய்தி தமிழ்த் திரையுலகில் பெரும் ஆட்கொள்ளா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது முதல் திரைப்படமான 16-வயதினிலே தொடங்கி, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, பசும்பொன், கருத்தம்மா என்ற காவியங்களை படைத்தவர்.

என்றும் இளம் இயக்குனர்களுக்கு இமயமாய் திகழ்பவர்.

ஸ்டூடியோக்களில் நடந்து வந்த படப்பிடிப்புகளை, கிராமங்களுக்கு எடுத்து சென்று மண்வாசனையை திரையுலகிற்கு அறிமுகப் படுத்தியவர்.

இன்றைய முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர்.

தேசிய விருதுகளையும், மாநில விருதுகளையும் பெற்று தமிழ் சினிமாவிற்கு மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே பெருமை சேர்த்தவர்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

அது சமயம் 11.06.2026 காலை 6-மணி முதல் மாலை 6-மணி வரை திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

error: Content is protected !!