“நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தில் சிறப்பாக வசனம் எழுதியதற்கு ஆனந்த விகடன் விருதை வென்றார் தமிழரசன் பச்சமுத்து.!!

“நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தில் சிறப்பாக வசனம் எழுதியதற்கு ஆனந்த விகடன் விருதை வென்றார் தமிழரசன் பச்சமுத்து.!!

சென்னை 03 ஏப்ரல் 2023 தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”.

சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் இப்படம் கொண்டாடப்பட்டது.

இப்படத்திற்காக தமிழரசன் பச்சமுத்து எழுதிய வசனங்கள் படத்தின் வெற்றிக்கு பெரும் பாலமாக இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆனந்த விகடன் விருதுகள் விழாவில் சிறந்த வசனத்திற்கான ஆனந்த விகடன் விருதை வென்றார் தமிழரசன் பச்சமுத்து.

இந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் “லேபிள்” வெப் சீரிஸின் படப்பிடிப்பில் படக்குழுவனருடன் தனது மகிழ்ச்சியை தமிழரசன் பச்சமுத்து பகிர்ந்து கொண்டார்.