சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான “தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று (நவம்பர் 29, 2025) துவங்கியது!

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான “Chennai District Masters Athletic Championship 2025” தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium) இன்று (நவம்பர் 29, 2025) துவங்கியது !

சென்னை 29 நவம்பர் 2025 இப்போட்டியை சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திருமதி ருக்மணி, பொருளாளர் திருமதி சசிகலா மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது

திரு மேகநாத ரெட்டி IAS இந்த போட்டியின் முதல் நாளை துவக்கி வைக்க சிறப்பு விருந்தினர்கள் நடிகர் அருண் விஜய், நடிகர் விஷ்ணு விஷால், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் R.அர்ஜூன் துரை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தலைவர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் Dr. ஐசரி கே கணேஷ் (Vels Film International), தொழிலதிபர் S.N.ஜெயமுருகன் (SNJ Group of Companies) ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வென்றவர்களூக்கு பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.

விருதுகள் விவரம்

John Devasir Memorial Award – Life time Achievement Award – திரு.சிகாமோனி V – 75+ yrs
Daisy Victor Memorial Award – Life Time Achievement Award – திருமதி தெரேஸா – 89 yrs

இன்றும், நாளையும் நடைபெறும் இந்த போட்டியில் மேலும் பல தடகள் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

error: Content is protected !!