மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘தி ஐ’ ( The Eye ) ஹாலிவுட் பட ஃபர்ஸ்ட் லுக் !!
மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘தி ஐ’ ( The Eye ) ஹாலிவுட் பட ஃபர்ஸ்ட் லுக் !!ஹாலிவுட் இயக்குநர் டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி ஐ ‘ ( The Eye) எனும் திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன், மார்க் ரௌலி, லிண்டா மார்லோவ், பெரு கவாலியேரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் டயானா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ஸ்ருதிஹாசன்- டயானா கதாபாத்திரத்தில் நீல வண்ணத்தில் கழுத்தை மூடிய ஸ்வெட்டர் அணிந்து கவலையுடன் தோன்றுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இந்த ஃபர்ஸ்ட் லுக்கிற்கு நடிகை ஸ்ருதிஹாசன், மூன்று ஹாட்டின் இமோஜிகளுடன், ‘நன்றி என் அன்பானவர்களே ‘ என பதிவிட்டு, தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சைக்காலஜிக்கல் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படம் கிரேக்க நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் மற்றும் லண்டனில் நடைபெற்ற சுயாதீன படைப்புகளுக்கான திரைப்பட விழாவிலும் கலந்து கொண்டு அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறது.
ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கோலிவுட் நட்சத்திரமான ஸ்ருதிஹாசனுக்கு ஏராளமான வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ‘தி ஐ’ ( The Eye) எனும் ஹாலிவுட் படத்திலும், நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்திலும், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ட்ரெயின்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய ஹாலிவுட் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய ஹாலிவுட் திரைப்படம் ‘தி ஐ’!! ‘தி ஐ’!!
தி சான்ட்மேன்: ஆக்ட் III ‘ எனும் ஆடியோ நாடகத்தில் குரல் கொடுத்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்!!
நடிகை ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!
திரைப்பட ரசிகர்களுக்கு ‘இரட்டை’ விருந்தளிக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.!
நடிகை சன்னி லியோன் கதையின் நாயகியாக நடிக்கும் ‘ஷீரோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.
நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் உலகநாயகனும் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு!
ஆந்திர திரைப்பட ரசிகர்களை மயக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்!!
நடிகர் அசோக் செல்வன் நடிகை ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ஹாஸ்டல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.!!
நடிகர் மேத்யூ தாமஸ் – நடிகை மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கும் ‘கிறிஸ்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.!

