இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ரைட்டர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

சென்னை 14 ஏப்ரல் 2021இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ரைட்டர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

இயக்குநர் பா.ரஞ்சித் தனது தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் 5 புதிய திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.

இதில் ஒரு திரைப்படத்தை இயக்குநர் சுரேஷ் மாரி என்பவர் இயக்கி வருகிறார்.

இதையடுத்து பிராங்க்ளின் ஜேக்கப் என்பவர் இயக்கவிருக்கும் திரைப்படத்தையும் தயாரிக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் திரைப்படத்திற்கு ‘ரைட்டர்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சமுத்திரக்கனி நடிக்கவுள்ளார்.

கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

பிரதீப் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.

மணி படத் தொகுப்பு செய்கிறார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகவுள்ளது.

error: Content is protected !!