“வைஃப்” (Wife) திரைப்படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது!
“வைஃப்” (Wife) திரைப்படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது!
சென்னை 06 ஏப்ரல் 2026 ஒலிம்பியா மூவிஸ் சார்பில் S அம்பேத்குமார் தயாரிப்பில், ஹேமநாதன் R இயக்கத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் இன்றைய நவீன கால “திருமண வாழ்வை” மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் “வைஃப்” (Wife). விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ”நீ சாரல்” மெலடி பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த இனிமையான பாடலை ஜென் மார்டின் இசையமைத்து, சுபலக்ஷினியுடன் இணைந்து பாடியுள்ளார். இயக்குநர் விஷ்ணு எடவன் இப்பாடலை எழுதியுள்ளார்.
மென்மையான இசையும், மனதை வருடும் வரிகளும் இணைந்து, “நீ சாரல்” பாடலை ஒரு அழகான காதல் மெலடியாக மாற்றியுள்ளது. வெளியான உடனே இந்தப் பாடல் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இன்றைய தலைமுறையில் திருமணத்திற்கு முன்பான காதலும், திருமணத்திற்குப் பின்பான காதலும் எப்படி இருக்கிறது என்பதையும், இன்றைய நவீன தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான ரொமான்ஸ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் மைத்திரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், விஜய் பாபு, கல்யாணி நட்ராஜன், லல்லு, கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
K.A. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். சிவ சங்கர் கலை இயக்கம் மேற்கொள்ள, தினேஷ், அசார், ராதிகா ஆகியோர் நடன அமைப்பை செய்துள்ளனர். VFX பணிகளை ஹோகஸ் போகஸ் நிறுவனம் செய்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.
Link :
Nee Saaral – Music Video | Wife | RJ Vijay, Anjali Nair | Jen Martin | Sublahshini | Hemanathan R











