திரையுலகின் அடுத்த பெரிய நட்சத்திரங்களான எஹான் பட் மற்றும் எடில்சி வர்காஸ் ஆகியோர் ’99 சாங்ஸ்’ மூலம் ஏ ஆர் ரஹ்மானால் அறிமுகம்.
சென்னை 02 ஏப்ரல் 2021
ஆஸ்கார், கிராமி போன்ற உயரிய விருதுகளை வென்று பெருமை சேர்த்துள்ள இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், ’99 சாங்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் அவதாரமெடுத்து புதிய எல்லைகளை தொட்டுள்ளார்.
இசையுடன் கூடிய காதல் கதையான இப்படத்தில், மிகவும் திறமை வாய்ந்த, திரையுலகின் அடுத்த பெரிய நட்சத்திரங்களாக உருவெடுக்க கூடிய எஹான் பட் மற்றும் எடில்சி வர்காஸ் ஆகிய நடிகர்களை அவர் அறிமுகம் செய்கிறார்.
எஹான் மற்றும் எடில்சியின் திறமை, திரை ஆளுமை மற்றும் ஈர்ப்பு ஆகியவை இந்த புதிய ஜோடியை திரையில் பார்க்கும் ஆர்வத்தை ரசிகர்களிடையே தூண்டியுள்ளது.
ஜியோ ஸ்டூடியோஸ் வழங்கும் இந்த காதல் கதையில், இசை தேடல் நிரம்பியவர்களாக இவர்கள் தோன்றுகின்றனர்.
இந்த இளம் நடிகர்களை குறித்து பேசும் ஏ ஆர் ரஹ்மான், “திறமை மிகுந்த எஹான் பட் மற்றும் எடில்சி வர்காஸ் ஆகியோரை அறிமுகப்படுத்துவதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
மிகவும் திறமையோடும், ஆர்வத்தோடும் அவர்கள் திகழ்கின்றனர். அவர்களின் திரையுலகப் பயணம் வெற்றியடைய நான் வாழ்த்துகிறேன்,” என்கிறார்.
’99 சாங்ஸ்’ பற்றி மகிழ்ச்சியுடன் பேசும் எலான் பட், “இப்படத்தின் டிரைலர் மூலம் எடில்சிக்கும் எனக்கும் கிடைத்துள்ள வரவேற்பு என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
எங்களது திரைப்படத்திற்கும் அதன் இசைக்கும் கிடைத்துள்ள ஆதரவும், ஊக்கமும் இதயத்தை தொட்டுள்ளது. பாலிவுட்டில் எந்த பின்புலமும் இல்லாதவர்களுக்கு எளிதில் கிடைக்காத வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ள ரஹ்மானுக்கு மிக்க நன்றி,” என்கிறார்.
2021 ஏப்ரல் 16 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ‘99 சாங்ஸ்’ வெளியாகிறது. ஜியா ஸ்டூடியோஸால் வெளியிடப்படவுள்ள இத்திரைப்படத்தை ஏ ஆர் ரஹ்மானின் தயாரிப்பு நிறுவனமான ஒய் எம் மூவிஸ் ஐடியல் என்டெர்டைன்மென்டுடன் இணைந்து தயாரித்துள்ளது.