‘தி பாரடைஸ்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- நானி, மோகன் பாபு, சத்யராஜ், கயாடு லோஹர், ராகவ் ஜூயல், கீர்த்தி சுரேஷ், சோனாலி குல்கர்னி, சம்பூர்ணேஷ் பாபு, ஈஸ்வரி ராவ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஸ்ரீகாந்த் ஒடேலா.
ஒளிப்பதிவாளர் :- சாய்.
படத்தொகுப்பாளர் :- நவீன் நூலி.
இசையமைப்பாளர் :- அனிருத் ரவிச்சந்தர்.
தயாரிப்பு நிறுவனம் :-ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஷ்வரா சினிமாஸ்.
தயாரிப்பாளர் :- சுதாகர் செருக்குரி.
மக்கள் தொடர்பு :- சதீஷ் குமார் (S2 Media).
வெளியீட்டு தேதி :- 24 செப்டம்பர் 2026.
ரேட்டிங் :- 2.5./5.
‘தசரா’ திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் நானி – இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ‘தி பாரடைஸ்’.
1980களின் செகந்திராபாத்தை பின்னணியாகக் கொண்டு, அடக்குமுறைக்குள் வாழும் சவாரி சமூகத்தின் உரிமை, அடையாளம், சுதந்திரம் மற்றும் எதிர்ப்பை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
80களின் காலகட்டத்தில் பாரடைஸ் என்ற பகுதியில் வாழும் அடையாளமற்ற ‘சவாரி’ பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
அப்பகுதியைத் தன்னுடைய அதிகாரத்தால் கட்டுப்படுத்தி, அந்த மக்களை மோகன் பாபு
அடக்கி ஆள்கிறார்.
அதற்கு பிறகு மோகன் பாபுவின் மகன் ராகவ் ஜூயல், சவாரி சமூகத்தின் மக்களை அடக்கி ஆள நினைக்கிறார்.
இந்த அடக்குமுறைக்கு எதிராக அந்த மண்ணிலிருந்து ஒலிக்கும் சில கிளர்ச்சிக் குரல்களில் ஒருவர் பல ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு ஊர் திரும்பும் கதாநாயகன் நானி, மோகன் பாபுவின் அதிகாரத்தை வீழ்த்தி தன் மக்களுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தர முடிவெடுக்கிறார்.
அடக்குமுறைக்குள் வாழும் சவாரி சமூகத்தின் உரிமை, அடையாளம், சுதந்திரம் மற்றும் எதிர்ப்பை மீறி மோகன் பாபுவிடம் இருந்து அதிகாரத்தை வீழ்த்தி தன் சவாரி சமூகத்தின்
மக்களுக்கு சுதந்திரம் பெற்று தந்தாரா?, பெற்று தரவில்லையா?, என்பதுதான் இந்த‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் மீதிக் கதை.
இந்த ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் கதாநாயகனாக நானி நடித்திருக்கிறார்.
தாய்-மகன் இடையேயான பாச உணர்வு, கதாநாயகன் நானி அறிமுக சண்டை காட்சி, இடைவேளை காட்சி என முதல் பாதியில் சில காட்சிகள் அருமையான நடிப்பு ரசிகர்களை ஈர்க்கின்றன.
இந்த ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் கதாநாயகியாக கயாடு லோஹர், நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் கயாடு லோஹர் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோகன் பாபு, சத்யராஜ், ராகவ் ஜூயல், சோனாலி குல்கர்னி, சம்பூர்ணேஷ் பாபு, ஈஸ்வரி ராவ்,
அனைவரும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சாய் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக காட்சிகளை திரைப்படம் ஆக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
திரைப்படத்தின் தொடக்கத்தில் கட்டியெழுப்பப்பட்ட, கதையின் தீவிரமும் அடுத்தடுத்த காட்சிகளில் அப்படியே திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது.
உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ரசிகர்களை திரைப்படத்திற்குள் இழக்காமல் , கொடூரமான சண்டைக் காட்சிகளை மட்டுமே நம்பியிருப்பது மிகப்பெரிய முட்டாள்தனம்.
மொத்தத்தில், ‘தி பாரடைஸ்’ திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ரத்தக் குளியல்.











