நடிகர் யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் !!
நடிகர் யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் !!
சென்னை 01 மே 2026 KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ( Toxic: A Fairy Tale for Grownups ) திரைப்படத்தின் வெளியீடு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 2026 ஜூன் 4 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், தற்போது புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, CinemaCon நிகழ்வில் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலக முக்கிய நபர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு, படத்தை மேலும் பெரிய அளவில் சர்வதேச சந்தைகளில் வெளியிட வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனால், படக்குழு தனது வெளியீட்டு திட்டத்தை மறுபரிசீலனை செய்துள்ளது.
படம் தற்போது முழுமையாக தயாராகியுள்ள நிலையில், உலகளாவிய விநியோகம் மற்றும் முக்கிய சர்வதேச கூட்டாண்மைகளை உறுதிப்படுத்தும் பணிகளில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படம் யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோரால் எழுதப்பட்டு, கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
இது குறித்து நடிகர் யாஷ் கூறியதாவது:
“சில படங்களை நாம் உருவாக்குகிறோம்… சில படங்கள் நம்மை மீண்டும் சினிமாவை காதலிக்க வைத்துவிடுகிறது. டாக்ஸிக் அப்படிப்பட்ட ஒரு பயணம். CinemaCon-ல் எங்கள் படத்தை வெளியிட்ட பிறகு, உலகளாவிய அளவில் கிடைத்த வரவேற்பு இந்த படம் இன்னும் பெரிய அளவில் செல்ல வேண்டிய படைப்பு என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.
டாக்ஸிக் படம் முழுமையாக தயாராகி விட்டது. தற்போது உலகளாவிய விநியோகம் மற்றும் கூட்டாண்மைகளை உறுதி செய்யும் பணியில் இருக்கிறோம். இதனால், ஜூன் 4 அன்று படத்தை வெளியிடவில்லை. ஆனால் விரைவில் புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும்.
இந்திய சினிமா உலகளவில் உயர்ந்து நிற்கும் இந்த நேரத்தில், தரத்தை மேலும் உயர்த்துவது நம்முடைய பொறுப்பு. அதற்காகவே இந்த முடிவு. உங்கள் ஆதரவை நான் எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன். சில கதைகள் பொறுமையை கேட்கும்… இந்தப் படம் அவற்றில் ஒன்று. நிச்சயமாக இது இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்.”
இந்த திரைப்படத்தில் யாஷ் உடன் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்
KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள “டாக்ஸிக்” திரைப்படம், புதிய தேதியில் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்
Related posts:
After Strong CinemaCon Response, Rocking Star Yash’s Toxic Release Shifted for Larger Global Release
Rumours silenced! Rocking Star Yash’s Toxic: A Fairy Tale for Grown-Ups to hit theatres on March 19, 2026 as originally announced !
Rocking Star Yash’s ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ takes over Gudi Padwa, Ugadi & Eid celebrations, setting March 19, 2026 as its grand release date !!
Rocking Star Yash unveils the poster of Toxic: A Fairy Tale For Grown-ups,promises a surprise on his birthday !!
Rocking Star Yash, Geetu Mohandas and Venkat Narayana announce the Title of the much awaited Yash19 as Toxic – A Fairy Tale for Grown-ups!!
On Rocking Star Yash’s birthday, here’s an unbridled and trippy ‘Birthday Peek’ from Toxic – A Fairy Tale for Grown-Ups !
A Landmark Moment for Tamil Nadu Trade as Yash’s Toxic: A Fairy Tale for Grown Ups Locks Massive Deal !!
ராக்கிங் ஸ்டார் யாஷ்: ‘டாக்ஸிக்’ ஒரு புதுமையான கேங்ஸ்டர் சினிமா அனுபவம்!
அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி! ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்(Toxic): எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் -அப்ஸ்’ (A Fairy Tale for Grown-Ups)— முதலில் அறிவித்தபடியே மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !
யாஷின் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ திரைப்படத்தின் தமிழக வர்த்தகம் மிகப்பெரிய ஒப்பந்தத்தின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது!

