இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’  படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.!

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’  படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.!

சென்னை 24 செப்டம்பர் 2023 இந்திய சினிமாவில் வெற்றிகரமான பான் இந்திய நடிகராக துல்கர் சல்மான் உள்ளார்.

அவரது திறமை மற்றும் தனித்துவமான படங்கள் தேர்வு மூலம் இன்று அவர் பெரும் உயரத்தை எட்டியது மட்டுமல்லாமல் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக உள்ளார்.

‘சீதா ராமம்’ போன்ற கிளாசிக் மற்றும் ‘கிங் ஆஃப் கொத்தா’ போன்ற கேங்ஸ்டர் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இப்போது தெலுங்கில் திறமையான இயக்குநரான வெங்கி அட்லூரியுடன் ‘லக்கி பாஸ்கர்’ என்ற தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார்.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர்.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சமீப வருடங்களில் தெலுங்கு சினிமாவில் வித்தியாசமான ஜானர்களில் திரைப்படங்கள் தயாரித்து வெற்றிக் கொடுத்து வருகிறது.

இப்போது அவர்கள் அடுத்து பான்-இந்திய மார்க்கெட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளனர்.

‘சார்/வாத்தி’ திரைப்படத்திற்குப் பிறகு அவர்கள் இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.

‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது.

இந்த விழாவில் தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

‘ஒரு சாதாரண மனிதனின் அளவிட முடியாத உயரங்களை நோக்கிய அசாதாரண பயணம்’ என்ற கருப்பொருளைச் சுற்றி வருவதுதான் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ஒன்லைன்.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார்.

தேசிய விருது பெற்ற எடிட்டர் நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.

மேலும் படம் குறித்தான தகவல்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்படும்.

நடிகர்கள்:-

துல்கர் சல்மான்

மீனாட்சி சவுத்ரி

தொழில்நுட்பக்குழு விவரம்:-

தயாரிப்பு வடிவமைப்பாளர்: வினீஷ் பங்களான்,

எடிட்டர்: நவின் நூலி,

ஒளிப்பதிவு: நிமிஷ் ரவி,

இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்,

தயாரிப்பாளர்கள்: நாக வம்சி எஸ், சாய் சௌஜன்யா,

எழுத்து மற்றும் இயக்கம்: வெங்கி அட்லூரி,

வழங்குபவர்: ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்,

பேனர்ஸ்: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்