Thursday, January 21
Shadow

எனது “மூன்பிக்சர்ஸ்” நிறுவனத்தின் தயாரிப்பான “நாற்காலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து நிறைவு பெற்றிருக்கிறது. 

சென்னை 12 ஜனவரி 2021

மரியாதைக்குரிய அனைத்து ஊடக நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கம்.

எனது “மூன்பிக்சர்ஸ்” நிறுவனத்தின் தயாரிப்பான “நாற்காலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து நிறைவு பெற்றிருக்கிறது.

”யோகி”, “வடசென்னை” திரைப்படங்களுக்கு அடுத்ததாக இயக்குனர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் இது.

”முகவரி”, “காதல்சடுகுடு”, “தொட்டிஜெயா” உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வி.இசட்.துரை ”இருட்டு” திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னராக இந்த “நாற்காலி”யை இயக்கியுள்ளார்.

இதில்அமீருடன், ”555” திரைப்படத்தின் நாயகி சாந்தினி ஸ்ரீதரன் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான்அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணியசிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவைபாபு, ஜார்ஜ்விஜய், வினோத்சாகர், ரவிவெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் இசை அமைப்பை வித்யாசாகர், ஒளிப்பதிவை E.கிருஷ்ணசாமி, படத்தொகுப்பை ஆர்.சுதர்சன், பாடல் பா விஜய், வசனம் அஜயன் பாலா – க.முரளி, கலை இயக்கத்தை ஏ.கே.முத்து, சண்டைக்காட்சிகளை டான் அசோக், நிழற்படப்பதிவை மோதிலால், விளம்பர வடிவமைப்பை ராஜா – வெங்கடேஷ் ஆகியோர் செய்துள்ளனர்.

மிகுந்த பொருட் செலவில் நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் கடைசியாக ”நாற்காலி” திரைப்படத்திற்காக ”நெஞ்சமுண்டு நேர்மையுண்டு” என்ற பாடலை பாடியிருக்கிறார் என்பதைத் தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.

இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவேகத்துடன் நடந்து வருகிறது. அனைத்து ரசிகர்களும் இன்புற்று மகிழ்ந்து அமரவிருக்கும் ”நாற்காலி”யை வரும் மார்ச் மாதம் திரையரங்கில் வெளியிட திட்டமிட்டிருக்கிறேன் என்பதையும் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடர்ந்து உங்கள் பேராதரவையும்,

நலத்தையும் நாடும்,

ஆதம் பாவா.

(தயாரிப்பாளர்)

CLOSE
CLOSE