மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர் !

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர் !

சென்னை 25 மே 2026 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் இனைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

அந்த அறிக்கையில்.. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அளித்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து, தற்போதைய தமிழ் திரைப்பட துறையில் உள்ள சூழ்நிலையை நன்கு புரிந்துகொண்ட மாண்புமிகு, தமிழக முதலமைச்சர் அவர்கள், புதியதாக வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் முதல் 7 நாட்கள் திரையரங்குகளில் ஐந்து காட்சிகள் திரையிடலாம் என்றும், மேலும் உள்ளூர் பண்டிகை காலங்களில் மற்றும் பொது விடுமுறை நாட்களில் 5 காட்சிகள் திரையிடலாம் என்ற அனுமதி அளித்துள்ளது தமிழ்த் திரையுலகினரிடையே மிகப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி அறிவிப்பு நல்ல திரைப்படங்கள் தயாரிக்க தயாரிப்பாளர்களிடம் உத்வேகம் அளித்துள்ளது.

இந்த அறிவிப்பினை அளித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும், இந்த அறிவிப்பினை வெளியிட உறுதுணையாக இருந்த மாண்புமிகு செய்திதுறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

error: Content is protected !!