காத்திருந்ததற்கு தகுந்தாற்போல பார்வையாளர்கள் வியக்கும் வகையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள அமேசான் ப்ரைம் வீடியோவின் இணையதளம் உள்ளது.

சென்னை : 03 அக்டோபர் 2020

மற்ற த்ரில்லர் கதைகளை போல இது இல்லை! இதற்கு முன் இல்லாத வகையில் ஒரு அதிகமான எதிர்ப்பார்ப்பை நிஷப்தம் உருவாக்கியதனால் நிஷப்தம் படத்தின் ரசிகர்கள் மற்றும் அதில் நடித்த நடிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக அமேசான் ப்ரைம் வீடியோ நிஷப்தம்என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது. ஒரு அட்டகாசமான கதை மற்றும் அனுஷ்கா ஷெட்டி, மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் மைக்கேல் மேட்சன் போன்ற திறமையான நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் சில மணி நேரங்களுக்கு முன்பு உலகளாவிய அளவில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. ஸ்ட்ரீம் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நல்ல விமர்சனங்கள் வந்து குவிய தொடங்கிவிட்டது.நிஷப்தம் இணையதளத்தில் வித்தியாசமான மற்றும் மேம்பட்ட அனுபவத்தை பெற, மக்கள் தங்கள் டிவைஸ்களில் மைக் மற்றும் ஸ்பீக்கர்களை  ஆன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை செய்த பின், பார்வையாளர்கள் சரியாக 3 நிமடங்களுக்கு அமைதியாக இருக்க வேண்டும், இந்த நேரத்தில் இணையதளம் பல்வேறு BTS  மல்டிமீடியாக்கள் மற்றும் இதற்கு முன் பாத்திராத படத்தின் சீன்களை வெளியிடும்.  திரைப்படத்தின் கருப்பொருளுடன் ஒத்து போகிற மாதிரி இந்த இணையதளத்தின் வடிவமைப்பு உள்ளது – அமைதியாக இருக்கும் நேரம் அதிகரிப்பதை பொறுத்து ரசிகர்கள் மகிழ்விக்க கூடிய விஷயங்கள் நடக்கும். அதோடு, பிரசித்தி பெற்ற, எல்லாரையும் அமைதியாக இருக்க சொல்லும் படி அனுஷ்கா செய்யும் சைகையுடன் அவரின் பல குணங்களை காட்டுவது போல் இருக்கும் முகப்பு பக்க வடிவமைப்பு ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக உள்ளது.

செவித்திறன் குறைந்த மற்றும் வாய்பேசமுடியாத திறைமையான கலைஞரான சாக்ஷி,

எதிர்பாராத விதமாக பேய் இருப்பதாக நம்பப்படும் வில்லாவில் நிகழும் மோசமான

சம்பவத்தை பார்த்ததால் அதன் குற்றவியல் விசாரணையில்  சிக்கிக் கொள்கிறாள். துப்பறியும்

போலிஸ் குழுவினர் இந்த வழக்கை முழுவதுமாக ஆராய்ந்து, பேய் முதல் காணாமல் போன

இளம்பெண் வரையிலான சந்தேக நபர்களின் பட்டியலை தாயார் செய்கின்றனர். கடைசிவரை

யூகிக்க முடியாத திருப்பங்களுடன், உங்களை இருக்கையின் நுணிக்கே வரைவழைக்கும் ஒரு

த்ரில்லர் படமாக நிஷப்தம் இருக்கும்.

இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2, 2020 முதல்  நிஷப்தம் திரைப்படத்தை தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் பிரத்யேகமாக ஸ்டிரீம் செய்யலாம்.

error: Content is protected !!