வார்னர் மியூசிக் இந்தியா நிறுவனத்துடன் இணைகிறது டிவோ நிறுவனம் !!!
சென்னை 10 பிப்ரவரி 2023வார்னர் மியூசிக் இந்தியா நிறுவனத்துடன் இணைகிறது டிவோ நிறுவனம் !!!
வார்னர் மியூசிக் இந்தியா ( Warner music India) நிறுவனம், டிவோ (Divo) நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த முதலீட்டு ஒப்பந்தத்தின் மூலம் டிவோ இசை நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற நான்கு தென்னிந்திய மொழி இசை சந்தைகளிலும் தனது தனித்துவத்தை நிலைநிறுத்தும்.
இந்திய பொழுதுபோக்குத் துறையில் முன்னணியில் இருப்பதற்கு வார்னர் மியூசிக் இந்தியாவிற்கு இந்த முதலீடு உத்தி பெரிதும் உதவும்.
வார்னர் மியூசிக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஜெய் மேத்தா கூறுகையில், “வார்னர் மியூசிக் இந்தியா” பேனரின் கீழ் டிவோ பிராண்டைக் கொண்டு வர முடிந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நடவடிக்கை நாட்டின் தென்னிந்திய பகுதியில் எங்கள் நிறுவனத்தை வலுப்படுத்தும். இந்தியாவில் எங்கள் நிறுவனம் மிகப்பெரும் வளர்ச்சியடைய, டிவோவின் விரிவான போர்ட்ஃபோலியோ உதவும். தென்னிந்தியாவில் எங்களின் இசையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் கலைஞர்களுக்கான அடையாளமும், இசை சூழலும் மிகப்பெரும் அளவில் மேம்படுத்தப்படும்”.
வார்னர் ரெக்கார்ட் மியூசிக், தலைவர் அல்போன்சோ பெரஸ் சொடோ ( Alphonso Perez Soto ) கூறுகையில், “டிவோ” நிறுவனத்தை எங்களுடன் இணைத்தது எங்களது இந்திய இசைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல். 2020 ஆம் ஆண்டில் வணிகத்திற்காக இதை நாங்கள் ஆரம்பித்தோம், மேலும் தொடர்ச்சியான ஒப்பந்தங்கள் மற்றும் கலாச்சார ரீதியாக தொடர்புடைய கலைஞர்களின் படைப்புகள் மூலம் சந்தையில் ஒரு முக்கிய போட்டியாளராக எங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளோம்.
நான்கு மாநில இசைச் சந்தைகளில் செயல்படும் ஒரு அற்புதமான நிறுவனத்தை உருவாக்கிய டிவோவில் உள்ள ஷாஹிர் மற்றும் விசு மற்றும் குழுவுடன் கூட்டாளியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
நாங்கள் ஒன்றாக இணைந்து, தென்னிந்திய இசையை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்வோம்”.
டிவோவின் நிறுவனரும் இயக்குநருமான ஷாஹிர் முனீர் கூறுகையில்,
“வார்னர் மியூசிக் இந்தியாவுடன் இணைவது எங்களுக்கு மிகப்பெரும் பெருமை. உலகளாவிய மிகப்பெரும் நிறுவனத்தில் நாங்கள் இணைந்து செயல்படுவது எங்களுக்கு மிகப்பெரிய மதிப்பை பெற்றுத்தரும். வாடிக்கையாளர்களை ஈர்க்க கூடிய மிகச்சிறந்த அம்சமாக இது இருக்கும்.
வார்னர் மியூசிக்கின் உலகளாவிய மதிப்பின் மூலம் எங்கள் இசை வணிகம் இன்னும் விரிவடையும், மேலும் இது எங்கள் கலைஞர்கள் மற்றும் லேபிள் நிறுவனங்களின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.
டிவோ இயக்குனர் விசு ராமசாமி
கூறியதாவது..,
“எங்கள் நிறுவனத்தின் அடுத்த கட்டமாக வார்னர் மியூசிக் இந்தியாவுடன் இணைவதில் பெருமை கொள்கிறோம்.
இந்தியாவில் எங்கள் நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் எங்களின் செயல் சித்தாந்தங்களின் மீதான நீண்ட கால அணுகு முறையை கடைப்பிடித்ததில் இந்த இணைப்பு மிக சரியானதாக அமைந்துள்ளது.
மேலும் இந்த இணைப்பால் எங்கள் நிறுவனம் தென்னிந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமாக மாறும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று உறுதியாக கூறுகிறார்.
@WarnerMusicIN buys majority stake in South India’s Biggest Music Label @divomovies @warnermusic @shahir_muneer @vishurams@JamRokr #AlfonsoPerezSoto @thiruupdates @pro_barani pic.twitter.com/JsbfGcmzzS
— 𝘼 𝙈𝙊𝙑𝙄𝙀 𝙒𝙄𝙉𝙂𝙕 (@amoviewingz) February 10, 2023