2026 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு சிறந்த திரைப்படப் பிரிவுக்கான தகுதிப் பட்டியலில் “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் தேர்வாகியுள்ளது !!

2026 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு சிறந்த திரைப்படப் பிரிவுக்கான தகுதிப் பட்டியலில் “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் தேர்வாகியுள்ளது !!

சென்னை 09 ஜனவரி 2026 ஆஸ்கார் விருதுகள் என்பது அமெரிக்கத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய சிறந்த விருதாகும், 

2026-ஆம் ஆண்டிற்கான 98-வது ஆஸ்கார் விருது விழா, வரும் மார்ச் மாதம் அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலில் நகரில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதியுடைய 201 திரைப்படங்களின் பட்டியலை அகாடமி வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியத் திரைப்படங்கள் குறித்து விபரம்.

சிறந்த திரைப்படப் பிரிவில் நடிகர் இயக்குநர் ரிஷப் ஷெட்டியின் இயக்கி நடித்த ‘காந்தாரா அத்தியாயம் 1’, அனுபம் கெர் இயக்கிய ‘தன்வி தி கிரேட்’ ஆகிய திரைப்படங்கள் இப்போட்டியில் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. தமிழ் திரைப்பட உலகில் இருந்து நடிகர் இயக்குநர் சசிகுமார் சிம்ரன் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி சிறந்த திரைப்படப் பிரிவுக்கான தகுதிப் பட்டியலில் தேர்வாகியுள்ளது.

நீரஜ் கய்வான் இயக்கிய ‘ஹோம் பவுண்ட்’ திரைப்படம் இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பதிவாக அனுப்பப்பட்டு, தற்போது 15 திரைப்படங்களைக் கொண்ட சுருக்கப்பட்ட பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

“மகாவதார் நரசிம்மா” திரைப்படம் சிறந்த அனிமேஷன் திரைப்படப் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

நடிகை ராதிகா ஆப்தே நடித்த சிஸ்டர் மிட்நைட் திரைப்படம், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பொதுப் பிரிவுகளில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளது. தொடர்ந்து இறுதிப் பரிந்துரைப் பட்டியல் ஜனவரி 22ஆம் தேதி அன்று வெளியாகும்.

error: Content is protected !!