சென்சார் வழங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே பெரும்பாலான திரையரங்குகளில் ‘பராசக்தி’ திரைப்படத்தின் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!
சென்சார் வழங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே பெரும்பாலான திரையரங்குகளில் ‘பராசக்தி’ திரைப்படத்தின் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பராசக்தி”.
இந்த “பராசக்தி” திரைப்படத்தில் அதர்வா, ஜெயம்ரவி, தேவ் இராம்நாத், பிருத்திவி ராஜ், குரு சோமசுந்தரம், பேசில் ஜோசப், ரஞ்சன் ராமநாயக்கா, ஆகியோர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த “பராசக்தி” திரைப்படத்தில் ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
டான் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
மொழி பிரச்சனை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த “பராசக்தி” திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், ‘பராசக்தி,’ திரைப்படம் குறித்த தேதிக்கு வெளியாகுமா என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தனர்.
‘பராசக்தி’ திரைப்படத்திற்கு ஒருவழியாக மத்திய U / A தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய தணிக்கை வாரியம் சான்று வழங்கியதை அடுத்து நாளை திட்டமிட்டபடி ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாகிறது.
தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே பெரும்பாலான திரையரங்குகளில் ‘பராசக்தி’ திரைப்படத்தின் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!
இதனை தொடர்ந்து, பெரும்பாலான திரையரங்குகளில் ‘பராசக்தி’ படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக டான் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
தமிழ்நாடு முழுவதும் நாளை 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘பராசக்தி’ படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
https://x.com/i/status/2009564785608929784











