ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வரும் வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் ட்ரெய்லர் !!
ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வரும் வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் ட்ரெய்லர் !!சென்னை 16 ஜூலை 2025 தமிழ திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு – பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் ‘மாரீசன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள ‘மாரீசன்’ திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா , ‘ஃபைவ் ஸ்டார் ‘ கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் எல். எல் பி கிரியேட்டிவ் புரொடியுசராக பணியாற்றியுள்ளது. கிராமிய பின்னணியில் ட்ராவலிங் திரில்லராக தயாராகி, சூப்பர் குட் பிலிம்ஸின் 98 ஆவது படமான இதனை பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சவுத்ரி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை உலகம் முழுவதும் ஏ பி இண்டர்நேஷனல் விநியோகிக்கிறது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் ஜூலை 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை விட ட்ரெய்லருக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடத்தில் இருந்து பெரும் பேராதரவு கிடைத்து வருகிறது.
‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு வடிவேலு – பகத் பாசில் கூட்டணி இணைந்திருப்பதாலும், இந்த படத்திற்கான ட்ரெய்லரில் சிறிய அளவில் திருட்டுகளில் ஈடுபடும் ஒருவனுக்கும்… அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் இடையேயான மறக்க இயலாத பயணம் தொடர்பான காட்சிகள் இடம் பிடித்திருப்பதாலும்..படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பார்வையாளர்களிடத்தில் எழுந்திருக்கிறது.
Related posts:
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் நடிகர்கள் வடிவேலு பகத் பாசில் நடிப்பில் ‘மாரீசன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு !!
நடிகர்கள் வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ ஜூலை 25ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது !!
மாமன்னன்’ வெற்றிக்கு பிறகு நடிகர் பஹத் பாசில் – வடிவேலு இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’ திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது !
இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் ‘ஹனுமான்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 18 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது !!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மாமன்னன் திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!!
மாஜா “ Enjoy Enjaami” பாடல் குறுகிய காலத்திற்குள் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது !
சாதனை படைத்து வரும் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ‘மோர்னியே!!
தடைகளை கடந்து சாதனை படைத்து வரும் ‘காந்தாரா’!
மறைந்த நடிகை வி.ஜே சித்ராவின் கடைசிப் படமான கால்ஸ் படத்தின் ட்ரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது..!
முதன்றையாக நான்கு மொழிகளில் விஷால் நடிக்கும் ‘சக்ரா’ . நான்கு மொழி நட்சத்திரங்கள் வெளியிடும் படத்தின் ட்ரெய்லர் !

