‘வள்ளுவன்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சேத்தன் சீனு, ஆஷ்னா சாவேரி,  மனோபாலா, சாய் தீனா, பிரேம்குமார், கராத்தே ராஜா,  மீசை ராஜேந்திரன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஷங்கர் சாரதி.

ஒளிப்பதிவாளர் :- சுரேஷ் பாலா.

படத்தொகுப்பாளர் :- சான் லோகேஷ்.

இசையமைப்பாளர் :- அஸ்வத்.

தயாரிப்பு நிறுவனம் :- ஆறுபடைபுரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- ஷைல்குமார் ராஜேந்திரன், வி.பாலச்சந்தர், நஞ்சுண்டே கவுடா, சதீஷ் ராஜேந்திரன்.

மக்கள் தொடர்பு :- புவன் செல்வராஜ்.

ரேட்டிங் :-  3.25./5.

தாய் தந்தை இல்லாமல் இருக்கும் கதாநாயகன் சேத்தன் சீனு  சுகி உணவு விநியோகம் செய்யும் வேலை பார்த்து வருகிறார்.

கதாநாயகி ஆஷ்னா சாவேரி ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உள்ள வயதான  முதியவர்களுக்கு உண்ண உணவு உடுத்த உடை என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

கதாநாயகி ஆஷ்னா சாவேரி முதியோர் இல்லத்தில் உள்ள வயதான முதியோர்களுக்கு செய்யும் சேவை மனப்பான்மையை பார்த்து கதாநாயகன் சேத்தன் சீனு. வியபடுகிறார்.

கதாநாயகி ஆஷ்னா சாவேரி உதவியாக அதே முதியோர் இல்லத்தில் தன்னால் முடிந்த உதவிகளை கதாநாயகன் சேத்தன் சீனு செய்கிறார்.

இதனால் கதாநாயகி ஆஷ்னா சாவேரி, கதாநாயகன் சேத்தன் சீனு, இருவரும் நட்பாக பழகும் இவர்களுக்கும் காதல் மலர்கிறது.

இதற்கிடையே, அரசியல்வாதி ஒருவரை மர்ம மனிதர்  கொடூரமான முறையில் கொலை செய்வதோடு மட்டுமல்லாமல் அவர் உடலில் சில தமிழ் வார்த்தைகளை கொலையாளி எழுதிவிட்டு செல்கிறார்.

அந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை ஆய்வாளர் அதே பாணியில் கொலை செய்யப்பட்டு இவர் உடலிலும் அதேபோல் தமிழ் வார்த்தைகளை கொலையாளி எழுந்து விட்டு செல்கிறார்.

இந்த மர்மமான முறையில் நடக்கும் இந்த தொடர் கொலை வழக்கை ஏற்கனவே  விசாரித்த காவல்துறை ஆய்வாளர் கொலை செய்யப்பட்டதால் இந்த கொலை வழக்கை காவல்துறை ஆய்வாளர் பிரேம் குமாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

காவல்துறை ஆய்வாளர் பிரேம் குமார் இந்த தொடர் கொலை வழக்கை விசாரிப்பதற்கு கையில் எடுத்த சில நாட்களில் அதே பாணியில் பிரபல வழக்கறிஞர் ஒருவரும் கொலை செய்யப்பட, கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் எழுதப்பட்டிருக்கும் தமிழ் எழுத்துகளை வைத்து அது திருக்குறள் என்று கண்டறியும்  காவல்துறை ஆய்வாளர் பிரேம்குமார், கொடிய குற்றம் செய்தவர்களை கடுமையாக தண்டனை அளிக்க வேண்டும் என்ற அந்த தமிழ் எழுத்துக்களின் அர்த்தம் என்பதை கண்டுபிடிக்கிறார்.

இந்த நிலையில், காவல்துறை ஆய்வாளர் பிரேம்குமாருக்கு கதாநாயகன் சேத்தன் சீனு மீது சந்தேகம் எழுகிறது.

கதாநாயகன் சேத்தன் சீனு  எதிராக எந்தவிதமான ஆதாரங்கள் இல்லை என்றாலும், சில விஷயங்கள் மற்றும் சம்பவங்கள் வைத்து சந்தேகத்தின் பெயரில் கதாநாயகன் சேத்தன் சீனுவை கொலையாளி என காவல்துறையினர் கைது செய்கிறார்கள்.

அதன் பிறகு உண்மையான கொலை குற்றவாளி யார் ?,

உண்மையான கொலை குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தார்களா? செய்யவில்லையா? என்பதுதான் இந்த ‘வள்ளுவன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘வள்ளுவன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக சேத்தன் சீனு, நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சேத்தன் சீனு, முதல் முறையாக குத்தாட்டம் போட்டு, வட சென்னை இளைஞராக நடித்திருந்தாலும், மிகவும் பொறுப்பான இளைஞராக தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை  மிகவும் சரியாக செய்திருக்கிறார்.

நடனம் மட்டும் இன்றி ஆக்சன் காட்சிகளிலும் அசத்தியிருக்கும் கதாநாயகன் சேத்தன் சீனு, மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

இந்த ‘வள்ளுவன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக ஆஷ்னா சாவேரி, நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஆஷ்னா சாவேரி, ஆரம்பத்தில் வழக்கமான கமர்ஷியல் கதாநாயகியாக வலம் வந்தாலும், இறுதி காட்சிகளில் அவர் எடுக்கும் அவதாரம் எடுத்து மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரேம்குமார், காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மனோபாலா, ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் தீனா, காவல்துறை ஆணையர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மீசை ராஜேந்திரன், வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கராத்தே ராஜா உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் தங்கள் வேலையை எந்தவித குறையின்றி கொடுத்த வேலை மிகச் சிறப்பாக  செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, ஒளிப்பதிவு மூலம் சென்னை நகரத்தையும், கதாபாத்திரங்களையும் மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் அஸ்வத் இசையில் பாடல்கள்  கேட்கும் ரகம்.

இசையமைப்பாளர் அஸ்வத்
பின்னணி இசை கதைக்கேற்றவாறு  பயணித்திருக்கிறார்.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் நடக்கும் பெண்களுக்கு எதிராக அநீதி இழப்பவர்கள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படாமல் பணம் பதவி அதிகாரம், சட்டத்தில் இருக்கும் பல ஓட்டைகள் இருப்பதால் எளிதில் குற்றவாளிகள் தப்பித்து விடுவதையும், அதிகாரமும்,  படைத்தவர்கள்  சட்டம் சாதகமாக இருப்பதையும் மிக அருமையாக சுட்டிக்காட்டியிருப்பதோடு, இப்படியாப்பட்ட பெண்களுக்கு அநீதி விளைவிக்கும்  குற்றவாளிகளுக்கு சட்டத்தை தாண்டிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர் சாரதி.

மொத்தத்தில், ‘வள்ளுவன்’ திரைப்படம் திருக்குறளை போலவே சிறப்பான திரைப்படம்.

error: Content is protected !!