சரத்குமார் மற்றும் வரலட்சுமியின் பெருமை இனி எனக்கும் சொந்தம். நிக்கோலய் சச்தேவ் !!
சரத்குமார் மற்றும் வரலட்சுமியின் பெருமை இனி எனக்கும் சொந்தம். நிக்கோலய் சச்தேவ் !!சென்னை 15 ஜூலை 2024 நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடித்ததும் இன்று வரலட்சுமி- நிக்கோலய் இருவரும் ஊடகம் மற்றும் இணையதள நண்பர்கள் பத்திரிகையாளர்கள் சந்தித்தனர்.
நிக்கோலய் பேசியதாவது…
எல்லோரும் வந்ததற்கு நன்றி.
தமிழ் இப்போதுதான் கற்றுக் கொண்டு வருகிறேன்.
பொண்டாட்டி என்ற வார்த்தை மட்டும்தான் இப்போதைக்கு தமிழில் தெரியும்.
மும்பை இனிமேல் என் வீடு கிடையாது.
சென்னைதான் என் வீடு.
என்னை நான் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன்.
என் பெயர் நிக்கோலய் சச்தேவ். நான் வரலட்சுமி என்ற அழகான பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறேன்.
திருமணத்திற்குப் பிறகு வரலட்சுமி அவரது பெயரை வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என நிச்சயம் மாற்ற மாட்டார்.
அவரது பெயர் வரலட்சுமி சரத்குமார் என்று இருப்பதையே நானும் விரும்புகிறேன்.
ஆனால், நான் அவரது பெயரை எடுத்துக் கொள்கிறேன்.
நிக்கோலய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்பதுதான் இனி என் பெயர்.
சரத்குமார் மற்றும் வரலட்சுமியின் பெருமை இனி எனக்கும் சொந்தம்.
வரலட்சுமி என்னைத் திருமணம் செய்திருந்தாலும் நான் அவருடைய முதல் காதல் இல்லை.
அவருடைய முதல் காதல் எப்போதும் சினிமாவில் நடிப்பதுதான்.
திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பார்.
உங்கள் அன்பும், ஆதரவும் நிச்சயம் அவருக்கு வேண்டும்” என்றார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசியதாவது…
நீங்கள் எல்லோரும் இங்கு வந்ததற்கு நன்றி.
நிக்கோலய் சொன்னதுபோல என்னுடைய காதல் அவர்.
ஆனால், என்னுடைய உயிர் சினிமாதான். அதனால், திருமணத்திற்குப் பிறகும் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பேன்.
வந்து வாழ்த்திய எல்லோருக்கும் நன்றி” என்றார்.
சுப்ரீம் ஸ்டார் நடிகர் சரத்குமார் பேசியதாவது…
வரலட்சுமிதான் நிக்கோலயை எங்களுக்கு அறிமுகப்படுத்தினர்.
நிக்கோலயுடன் எங்கள் குடும்பத்திற்கு கண்டதும் காதல் வந்துவிட்டது.
ரொம்ப எனர்ஜிட்டிக்கான மனிதர் அவர்.
அவர் கொடுத்திருக்கும் சந்தோஷம் நிச்சயம் வாழ்நாள் முழுவதும் தொடரும்.
இறைவனால், இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர்.
உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்.
Related posts:
தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு நேரில் திருமண அழைப்பு கொடுத்த வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ் !
நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் ‘கொன்றால் பாவம்’ படத்தின் மற்றும் இசை வெளியீட்டு விழா.!!
விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ’மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் விரைவில் திரையில் !
சொந்த ஊர்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர், முக கவசம் பொருட்கள் நடிகை வரலட்சுமி சரத்குமார் வழங்கினார்
சண்டைக்காட்சியில் டூப் இல்லாமல் நடித்த வரலட்சுமி சரத்குமார்
எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் -: வரலட்சுமி சரத்குமார் அதிரடி
சேஸிங் திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார்.
எனக்கும் யோகிபாபுவுக்கும் திருமணமா⁉ – நடிகை விளக்கம்.
வதந்தி பரப்புபவர்கள் அந்த காதலன் யார் என்பது குறித்து எனக்கும் சொல்லுங்கள். ஐஸ்வர்யா ராஜேஷ்
“மைக்கேல்” திரைப்படத்தில் இணைந்த நடிகை வரலட்சுமி சரத்குமார்.

