தனியார் அரசு உதவிபெறும் பள்ளியில் வேட்டையன், கோட் திரைப்படம் திரையிடப்பட்டது குறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரணை !

தனியார் அரசு உதவிபெறும் பள்ளியில் வேட்டையன், கோட் திரைப்படம் திரையிடப்பட்டது குறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரணை !

சென்னை 12 நவம்பர் 2024 திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் உள்ள தனியார் அரசு உதவிபெறும் பள்ளியில் கடந்த சனிக்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘வேட்டையன்’ மற்றும் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ‘கோட்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

இதனை எதிர்த்து அப்பகுதியில் உள்ள மக்கள் திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலரிம் புகார் அளித்த நிலையில் பள்ளியில் திரைப்படங்கள் திரையிடப்பட்டது குறித்து இன்று காலை முதல் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார்.

இதற்காக பள்ளி மாணவிகளிடம் ரூபாய் 25 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படமும், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படமும் திரையிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மாணவிகளிடம் வாங்கிய பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தாவல் வெளியாகியுளளது.