மதிப்புக்குரிய ஆளுனர் மற்றும் ஆட்சியாளர்களே மன்றாடிகேட்கிறோம் மனது வைங்கள்.. உடனே தம்பி பேரறிவாளன் விடுதலை தாருங்கள் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
வணக்கம்
எழுவர் விடுதலையில் உச்ச நீதிமன்றம் தடையாக இருக்க விரும்பவில்லை..
ஆளுனர் முடிவெடுத்து விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தன் கருத்தை அறிவித்தும்.
தமிழக அரசு அனைத்துக்கட்சித் தலைவர்கள் தமிழக மக்கள் கோரிக்கை வைத்தும் விடுவிப்பதில் காலதாமதம் செய்வது வருத்தத்துக்குரியது.
தம்பி பேரறிவாளன் விடுதலைக்காக ஒரு தாய் 30 வருடமாக சட்ட போராட்டங்கள் நடத்தி ஒரு விடியற்காலை பொழுதுக்காக கண்ணீர் மல்க காத்திருப்பது வேதனைக்குரியது.
மதிப்புக்குரிய ஆளுனர் மற்றும் ஆட்சியாளர்களே மன்றாடிகேட்கிறோம் மனது வைங்கள்..
உடனே விடுதலை தாருங்கள்.
அன்புடன்
இயக்குநர் இமயம் பாரதிராஜா













