ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆரின் 25 ஆண்டுகள் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக வார் 2 டிரைலரை வெளியிடும் யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம்!
ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆரின் 25 ஆண்டுகள் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக வார் 2 டிரைலரை வெளியிடும் யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம்!
சென்னை 26 ஜூலை 2025 வார் 2 படத்தில் எண் 25க்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது.
இந்திய சினிமாவின் இரு பெரிய நட்சத்திரங்களான ஹ்ரித்திக் ரோஷனும், ஜூனியர் என்டிஆரும் ஒரே படத்தில் இணைத்து, ஆதித்யா சோப்ரா ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
இந்த படம் யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்ஸ் வரிசையில் இணைகிறது. இந்த படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார்.
இந்த வருடத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், ஜூனியர் என்டிஆரும் தங்களின் சினிமா வாழ்க்கையின் 25வது ஆண்டை அடைந்துள்ளனர் .
இதனை கொண்டாடும் விதமாக யஷ் ராஜ் நிறுவனம் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான வார் 2 படத்தின் ட்ரைலரை வருகின்ற ஜூலை 25ம் தேதியன்று வெளியிடுவதாக இன்று அறிவித்துள்ளனர்.
ஹ்ரித்திக் மற்றும் என்டிஆரின் இவர்களின் இந்திய சினிமாவுக்கான பங்களிப்பை பாராட்டும் விதமாக யஷ் ராஜ் நிறுவனம் ட்ரைலர் வெளியீட்டு அறிவிப்பை பகிர்ந்துள்ளனர்.
அதில் அவர்கள் பதிவிட்டபடி,”2025ம் ஆண்டில் இந்திய சினிமாவின் இரண்டு அடையாளங்கள் தங்களின் சிறப்பான 25 ஆண்டு சினிமா பயணத்தை நிறைவு செய்கின்றனர்.
வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே நிகழும் இந்த தருணத்தை கொண்டாட, வார் 2 பட ட்ரைலர் வருகின்ற ஜூலை 25ம் தேதியில் வெளியாகிறது!” என பகிர்நதுள்ளனர் .
வார் 2 திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.
இதில் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
வார் 2 டிரெய்லர்: ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’ என்ற வசனத்தோடு ரித்திக் ரோஷன் கூறுகிறார் !
வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது !!
யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆலியா பட் மற்றும் ஷர்வரி இணைந்து நடித்துள்ள ‘ஆல்பா’ திரைப்படம் டிசம்பர் 25,2025- கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ளது!
ரன்வீர் சிங் நடிப்பில் ‘ஜெயேஷ்பாய் ஜோர்தார் ” திவ்யாங் தக்கர் இயக்க யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது
சித்திர செவ்வானம் திரைப்படத்தின் தலைப்பு எங்களுடையது – ஜி5 மற்றும் திங்க் பிக் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனத்திற்கு “அத்திலி சினிமா” நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வார்2′ திரைப்படத்தில் இருந்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் முதல் தோற்றம் வெளியானது !!
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !’
ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம் ஹிர்திக் ரோஷன் நடிக்கும் புதிய பான்-இந்தியா திரைப்படம் !!
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் – கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்கள் !
ஒரு நொடி திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக அறிமுக இயக்குனர் மணிவர்மனுக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்கள்!!

