ஆந்திரம், தெலங்கானா, கோவா, ஹிமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தாய்லாந்து என இந்தத் திரைப்படம் 5 மாநிலங்களிலும், ஒரு சர்வதேச நாட்டிலும் படம் பிடிக்கப்பட்டுள்ளது” என்கிறா ‘வி’ திரைப்படத்தின் இயக்குநர் மோகன கிருஷ்ணா.
அமேசான் ப்ரைம் வீடியோவின் சமீபத்திய தெலுங்கு த்ரில்லர் திரைப்படமான ‘வி’, ட்ரெய்லர் வெளியான தினத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது. தனித்துவமிக்க இந்த ட்ரெய்லரில் நானி, சுதீர் பாபு மற்றும் பல நட்சத்திரங்களின் தாக்கமுள்ள நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தப் படத்தின் இயக்குநர் மோகன கிருஷ்ணா, அற்புதமான நடிகர் நடிகையர் பட்டாளத்தைப் வைத்து, அவர்களிடமிருந்து மிகச் சிறந்த நடிப்பைப் பெற்று, அற்புதமான படைப்பைத் தந்துள்ளார். நடிகர்களின் சிறப்பைத் தாண்டி, தாய்லாந்தில் நடந்த அயல் நாட்டுப் படப்பிடிப்போடு சேர்த்து இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் திரைப்படம் என்கிற சிறப்பம்சம் பெற்றுள்ள திரைப்படம் இது.
‘வி’ திரைப்படத்தை ரசிகர்களுக்கு இன்னும் சுவாரசியமானதாக, பொழுதுபோக்குத் தரும் படைப்பாக மாற்ற பல விஷயங்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன
“பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்படும் திரைப்படங்களில் வழக்கமாக காட்சி ரீதியாக, வண்ணங்களில் வேறுபாடு இருக்கும். ஆனால் எங்கள் நோக்கமே வண்ணங்களில் அப்படி வேறுபாடு இல்லாமல் நிலையான ஒரு காட்சி அனுபவத்தைத் தருவது தான்.
இரவோ, பகலோ, காட்சிகளின் வண்ணங்கள், அதன் தன்மை நிலையாக இருக்க வேண்டும் என்றே நினைத்தேன். எனவே அதற்காக உடை அலங்காரம், தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தினோம். எந்த மாதிரியான உடைகளை, நிறங்களை பயன்படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். ஏனென்றால் உடைகள் அந்தந்த இடங்களுக்கு ஏற்றார் போலவும் இருக்க வேண்டும்.
கோவா முழுக்க வெப்பமான இடம். மும்பை ஈரப்பதமும், வெப்பமும் நிறைந்த இடம், தாய்லாந்து வெப்ப மண்டலப் பகுதி, மணாலி அதிகக் குளிரான பகுதி. இவ்வளவு இடங்களில், வெவ்வேறு தட்பவெப்ப நிலையில் படம்பிடிக்கப் பட்டாலும் ரசிகர்களுக்கு சீரான ஒரு காட்சி அனுபவத்தை தர வேண்டும் என விரும்பினோம்.
எல்லா தோற்றங்களையும் ஒரே மாதிரியான தன்மைக்குள் கொண்டு வருவது எங்களுக்கு சவாலாக இருந்தது. அதே நேரத்தில் நாங்கள் நினைத்த தன்மை கதைக்கும் ஒரு தனித்துவத்தைக் கொடுத்தது. ஒரு நீண்ட காலகட்டத்தில் நடக்கும் கதை இது. ரசிகர்கள் ஒரு நாவலைப் படித்ததைப் போல, அந்தந்த இடங்களை நேரடியாக பார்த்ததைப் போல உணர வேண்டும் என்று விரும்பினேன். பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தியதால் அது சாத்தியமானது” என்கிறார் மோகன கிருஷ்ணா.
நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டமே ‘வி’ என்கிற சீட்டு நுனிக்கே ரசிகர்களை அழைத்து வரும் த்ரில்லர். காதல் த்ரில்லர் திரைப்படமான இதில், ஒரு காவல்துறை அதிகாரி, க்ரைம் எழுத்தாளர் ஒருவரைக் காதலிக்கிறார். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கும் வேளையில் ஒரு கொலைகாரன், அந்தக் காவல்துறை அதிகாரிக்கு புதிர் போட்டு அதற்கு பதிலளிக்கச் சொல்லி சவால் விடுகிறான். முதல் முறையாக நானி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தில், அவரது வில்லத்தனத்தைப் பார்க்க பார்வையாளர்கள் ஆவலுடன் உள்ளனர்.
நிவேதா தாமஸ், அதிதி ராவ் ஹைதரி, ஜகபதி பாபு, வெண்ணெலா கிஷோர், நாசர் உள்ளிட்டோரும் ‘வி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
செப்டம்பர் 5 முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ‘வி’ ஸ்ட்ரீம் செய்யப்படும் .
Related posts:
தேன்” திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிப் பெற்று இருப்பதோடு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியும் இருக்கிறது இயக்குநர் கணேஷ் விநாயகன்
தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்ற இயக்குநர் அமுதவாணனின் கோட்டா திரைப்படம்.
நடிகர் நிகில், இயக்குநர் கேரி BH மற்றும் ED Entertainment இணையும், பான் இந்திய பிரமாண்ட திரைப்படம் “ஸ்பை” !
ஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் முதல் மும்மொழி திரைப்படமாகும். இப்படம் இன்னும் பல மும்மொழி திரைப்படங்களுக்கு வழிவகுக்கவுள்ளது.
தாமிரபரணி’, ‘பூஜை’ வெற்றிப் படங்களுக்கு பிறகு விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படம்.!!
நடிகர் நானி மற்றும் சுதீர் பாபுவின் அதிரடி திரில்லர் படமான ‘V’ இப்பொழுது தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஒளிபரப்பப்படுகிறது.
அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் சச்சின் – அபர்நிதி நடிக்கும் ‘Demon’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியானது.!
அந்நியன் இந்தி திரைப்படம் முலம் இயக்குநர் ஷங்கர் மற்றும் ரன்வீர் சிங் கூட்டணி.
Rowdy Pictures சார்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வழங்கும் “கூழாங்கல்” எனும் Pebbles படம “சிறந்த சர்வதேச திரைப்படம்” எனும் பிரில் 2022 Spirit Awards விழாவில் பரிந்துரையாகியுள்ளது !
51வது சர்வதேச இந்தியன் பனோரமா எனது தேன் திரைப்படம் விருதிற்கு தேர்வாகி உள்ளது இயக்குநர் கணேஷ் விநாயகன்.

