ஆன்லைனில் டிக்கெட் விற்பனை குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு

சினிமா டிக்கெட் கட்டணங்களை முறைப்படுத்தி மல்டி பிளக்ஸ் மற்றும் குளிர்சாதன திரையரங்குகளுக்கும் குளிர்சாதன வசதி இல்லாத திரையரங்குகளுக்கும் தனிதனி கட்டணங்கள் விதிக்கப்பட்டு அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. இதுபோல் ஆன்லைன் மூலம் டிக்கெட் கட்டணங்களை வெளிப்படையாக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆன்-லைன் டிக்கெட் விற்பனை திரைத்துறைக்கு ஆரோக்கியம் தரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தமிழ் சினிமா வரலாற்றில் இந்த திட்டம் ஒரு மைல்கல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!