இந்தியன் 2 படப்பிடிப்பில் முன்று பேர் மரணம்; கமல்ஹாசன் உருக்கமான பதிவு!

இந்தியன் 2 படப்பிடிப்பில் முன்று பேர் மரணம்; கமல் உருக்கமான பதிவு!

கமல்ஹாசன் நடிப்பில் லைகா புரெடக்ஷன் தயாரித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ஷங்கர்.

இந்த படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளது,

எனவே செட் அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக, செட் அமைக்கும் பணியின்போது பயன்படுத்தப்பட்டு வந்த கிரேன் அறுந்து விழுந்து விட்டது.

பல அடி உயரத்தில் இருந்து விழுந்த கிரேனில் சிக்கி, செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களின் 3 பேர் தகவல்கள் கிடைத்துள்ளன. மது (29) சந்திரன் (60) மற்றும் கிருஷ்ணா (34) ஆகியோர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தன் இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில்… எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

இவ்வாறு கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

error: Content is protected !!