கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி; 7 பேர் படுகாயம்
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி; 7 பேர் படுகாயம்
லைகா புரெடாக்ஷ்ன் தயாரிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன், ஷங்கர், அனிருத் இணைந்துள்ள படம் இந்தியன் 2.
இதில் கமலுடன் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
கமலின் அரசியல் வருகை, ஆப்ரேசன் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் சூட்டிங் தாமதமானது.
தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்காக பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் இன்றிரவு (புதன்கிழமை) நடைபெற்று வந்தன.
அப்போது எதிர்பாராத விதமாக, செட் அமைக்கும் பணியின்போது பயன்படுத்தப்பட்டு வந்த கிரேன் அறுந்து விழுந்துள்ளது.
பல அடி உயரத்தில் இருந்து விழுந்த கிரேனில் சிக்கி, செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களின் 3 பேர் தகவல்கள் கிடைத்துள்ளன. மது (29) சந்திரன் (60) மற்றும் கிருஷ்ணா (34) ஆகியோர் இறந்துள்ளனர்.
மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர் 7 பேர் அருகில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இந்தியன் 2 படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.











