இயக்குனர்களுக்கு அக்கறை வேண்டும் – பிரபல நடிகை

குழந்தை திருமணத்தை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் யுனிசெப் தூதுவராக நடிகை திரிஷா பங்கேற்றார். அப்போது கல்லூரி மாணவி ஒருவர் பள்ளி மாணவிகள் காதலிப்பது போல சினிமாவில் காட்சிகள் வைக்கப்படுவதால் அதை பார்த்து குழந்தை திருமணம் பெருகுவதாக குற்றஞ்சாட்டினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “பள்ளி பருவ காதல் காட்சிகள் கொண்ட படங்கள் எடுக்கும் சினிமா இயக்குனர்களுக்கு சமூக அக்கறை வேண்டும்” என்று த்ரிஷா ஒப்புக் கொண்டு செய்தியாளர் சந்திப்பை பாதியிலே முடிந்து விட்டு வெளியேறினார்.

error: Content is protected !!