பிரபல நடிகை ஜெயசித்ராவின் கணவரும் பிரபல இசையமைப்பாளர் அம்ரீஷ் தந்தை உடல்நல குறைவால் இன்று காலமானார்.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஜெயசித்ரா பெரும்பாலும் 1970 மற்றும் 1980 களில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.
தமிழ் திரைப்பட உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இயக்குநர் கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானாலும் கே.பாலசந்தரின் அரங்கேற்றம் தான் இவரை தமிழ் திரைப்பட உலகிற்கு அடையாளப்படுத்தியது.
அதன் பின்னர் பாராதாவிலாஸ், சொல்லத்தான் நினைக்கிறன், பணத்துக்காக, சினிமா பைத்தியம், என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் திரைப்படங்களில் எம்ஜிஆர் சிவாஜி சிவக்குமார் என பலருடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜெயசித்ரா.
இவர் புதுப்புது அர்த்தங்கள், மாமன் மகள் போன்ற 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அத்துடன் அலைகள் ரங்க விலாஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
திரைப்பட உலகில் வாய்ப்புகள் குறைய துவங்கியதும் கடந்த 1983 ஆம் ஆண்டு கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுடைய மகன் தான் பிரபல இசை அமைப்பாளர் அம்ரீஷ் சில திரைப்படங்களில் நடித்துள்ள அம்ரீஷ் இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார்.
இந்நிலையில் பிரபல நடிகை ஜெயசித்ரா அவர்களின் கணவரும், இசையமைப்பாளர் அம்ரிஷ் அவர்களின் தந்தையுமான திரு. கணேஷ் அவர்கள் திருச்சியில் இன்று காலமானார்.
நடிகை ஜெயசித்ரா கணவர் கணேஷ் அவர்களுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
அவருக்கு வயது 62 கும்பகோணத்தில் பிறந்த அவர் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
அன்னாரது திருவுடல் தற்போது திருச்சியில் இருந்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவர்களது இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டது.
நாளை இறுதி சடங்கு நடைபெற இருக்கிறது.
நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் மறைவுக்கு திரையுலகினர் அவருக்கு நெருக்கமான இரங்கலும் ஆறுதலும் கூறி இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.