இளைய தளபதி பட்டத்தை ஆட்டைய போட்ட தளபதியின் தந்தை எஸ்.ஏ.சி

கேப்டன் விஜயகாந்தை போல முக சாயல் உடையவர் நடிகர் சரவணன்.

1990களில் இவர் நிறைய படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார்.

நித்தியானந்தா புகழ் ரஞ்சிதாவும் இவருடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடிகர் கார்த்தி நடித்த முதல் திரைப்படம் பருத்தி வீரன் இந்த திரைப்படத்தை இயக்குனர் அமீர் இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தியுடன் சித்தப்பா கேரக்டரில் நடித்து சித்தப்பு என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருந்தார்.

1990 களில் வெளியான ‘நல்லதே’ நடக்கும் எனும் படத்தில் இவர் கதாநாயகனாக நடித்த போது அந்த திரைப்படத்தின் டைட்டில் கார்டில் இளையதளபதி சரவணன் எனும் பட்டப்பெயர் இடம் பெற்றிருந்தது.

இது குறித்து சித்தப்பு சரவணன் தற்போது ஒரு பிரபல பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளார்.

அதில்… சேலத்தில் நடந்த ஒரு சினிமா பாராட்டு விழாவில் இவர் கலந்துக் கொண்டாராம்.

அப்போதைய சேலம் திமுக பிரமுகர் ஒருவர், சினிமாவில் தளபதியாக கலக்கிக் கொண்டிருக்கும் சரவணனுக்கு இளைய தளபதி என்று பட்டம் கொடுக்கலாம் என பட்டப் பெயர் சூட்டினாராம்.

இதன் பின்னர் தான் ‘இளையதளபதி சரவணன்’ எனும் பெயர் இடம் பெற்றிருந்தது.

அதன் பிறகு நடிகர் சரவணனுக்கு பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் இல்லை.

அப்போதுதான் நடிகர் விஜய் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் இளைய தளபதி என அவருக்கு பட்டம் கொடுத்திருந்தார் அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர்.

இதனை பார்த்த நடிகர் சரவணன் நேரிடையாக நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.யை சந்தித்து, எப்படி என்னுடைய டைட்டிலை பயன்படுத்தலாம் என கேட்டாராம்.?

அதற்கு உங்களுக்கு பட வாய்ப்பு வரும்போது நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனக் கூலாக கூறி விட்டாராம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.

ஆனால் அதன் பின்னர் நடிகர் சரவணனுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். இதனால் இளைய தளபதி பட்டத்தை நடிகர் சரவணன் பயன்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

நடிகர் தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சி இளைய தளபதி பட்டத்தை நடிகர் சரவணன் இடமிருந்து திருடி தனது மகன் தளபதி விஜய்க்கு பயன்படுத்தியுள்ளார்.

error: Content is protected !!