எனது நண்பர் அஜித்குமார் மாதிரி வந்துட்டேன் மாஸ்டர் இசை வெளியீடு விழாவில் தளபதி விஜய் பேச்சு

மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தளபதி விஜய் பேசியதாவது…

என் நெஞ்சில் குடியிருக்கும் என் ரசிகர்களே…

எனக்கு வருத்தமாக இருக்கு. என் ரசிகர்களை இந்த இசை விழாவுக்கு அழைக்க முடியவில்லையே என்று. பிகில் பட இசை விழாவின் போது சில பிரச்சினை ஏற்பட்டது.

அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் வேற. எனவே தான் அழைக்க முடியவில்லை. அதற்கு மன்னிக்கவும்.

இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கு ஒரு குட்டி கதை இருக்கு, அனிருத் மற்றும் அருண் ராஜா காமராஜ் வச்சி செஞ்சிட்டாங்க.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இந்த படத்தோட வில்லன். தமிழ் சினிமாவுல ஒரு தவிர்க்க முடியாத ஆள உருவாகி நிக்கிறாரு.

ஏன் இந்த படத்துல வில்லன் கேரக்டர் பண்ணிறிங்கன்னு மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கிட்ட கேட்டேன். என்னை நாலே வார்த்தையில ஆஃப் பண்ணிட்டாரு.

உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் சொல்லிட்டாரு.

மாளவிகாவுக்கு தமிழ் சினிமாவுக்கு ஏற்ற அழகான முகம். அவர் உடனே தமிழ் கத்துகிட்டாரு.

நம்ம நண்பர் அஜித்குமார் மாதிரி டிரெஸ் பண்ணிட்டு போலம்னு கோட் சூட் போட்டு வந்திருக்கேன்” என்றார் (அப்போது கரவொலி அடங்க வெகு நேரம் ஆனது.

என பேசினார் தளபதி விஜய்.

error: Content is protected !!