ஒரே படத்தில் அஜித் குமார் விஜய் சூர்யாவுடன் நடித்தேன் அப்ப நான் அதிர்ஷ்டசாலி தான் நடிகை ஜெனிஃபர்.!

நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தான் நடிகர் சூர்யா சினிமாவுக்கு அறிமுகமானார்.

முதல் திரைப்படத்திலேயே தளபதி விஜய்யுடன் சூர்யா இணைந்து நடித்திருப்பார்.

இயக்குனர் வசந்த் இயக்கிய அந்த திரைப்படத்தை மணிரத்னம் தயாரித்து 1997ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது.

இந்த நேருக்கு நேர் திரைப்படத்தில் நடிகர் சூர்யா வேடத்தில் முதலில் அஜித்குமார்தான் நடித்திருந்தார்.

சில நாட்கள் அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

அதன் பின்தான் சில காரணங்களால் அந்த திரைப்படத்தில் இருந்து அஜித்குமார் விலகினார்.

இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஜெஃனிபர்.

இவர்தான் சில ஆண்டுகளுக்கு பிறகு கில்லி திரைப்படத்தில் நடிகர் தளபதி விஜயின் தங்கையாக நடித்திருந்தார்.

இந்தநிலையில் நேருக்கு திரைப்படத்தில் தொடர்பாக தளபதி விஜய் அஜித்குமார் மற்றும் சூர்யா உடன் இருக்கும் போட்டோக்களை அவர் பகிர்ந்துள்ளார்.

இதில் வாழ்க்கை என்பது நிகழ்வுகளின் தொகுப்பு ஒரே திரைப்படத்தில் நான் தல அஜித்குமார் மற்றும் தளபதி விஜயுடன் நடித்தேன்.

இந்தத் திரைப்படம் என் வாழ்வில் மிகச் சிறந்த நிகழ்வாகும்.

ஒரு வாரம் மட்டுமே அந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் நடித்தார் பின்னர் சூர்யா நடித்தார் அந்த காட்சிகளை மறுபடியும் படமாக்கினார்கள்.

அந்தத் திரைப்படத்திற்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருது எனக்கு கிடைத்தது மாநில அரசின் விருது உள்பட என தெரிவித்துள்ளார் ஜெனிஃபர்.

இப்போ சொல்லுங்க ஜெனிஃபர் அதிர்ஷ்டசாலியான ஆள் தானே.

error: Content is protected !!